இந்தியா ஒரு தீபகற்ப நாடு. இந்தியாவின் மூன்று திசைகள் கடலால் சூழப்பட்டுள்ளது. அதன் பரந்த கடற்கரை மற்றும் ஏராளமான நன்னீர் வளங்கள் காரணமாக இந்தியாவில் மீன் வளர்ப்பு என்பது ஒரு இலாபகரமான வணிகமாகும்.
மீன் வளர்ப்பு வணிகத்தில் வெற்றி என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம், மீன் வகை, சந்தை தேவை மற்றும் விவசாய நடைமுறைகள் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில் மிகவும் இலாபகரமான மீன் வளர்ப்பு வணிக யோசனைகள் சிலவற்றை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
1.இறால் வளர்ப்பு: இறால் வளர்ப்பு, குறிப்பாக வன்னாமி மற்றும் கரும்புலி இறால் வளர்ப்பு, அதிக ஏற்றுமதி தேவை காரணமாக இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இறால் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
2.கேட்ஃபிஷ் வளர்ப்பு: கேட்ஃபிஷ், குறிப்பாக மகூர் அல்லது ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை நன்னீர் குளங்கள் மற்றும் தொட்டிகளில் வளர்க்கலாம். அவை வளர்ப்பது மற்ற மீன் வளர்ப்புடன் ஒப்பீட்டளவில் எளிதானது மற்றும் இதற்கான சந்தைத் தேவை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
3.திலாப்பியா வளர்ப்பு: திலாப்பியா விரைவாக வளரும் ஒரு மீன். இது நன்னீர் மற்றும் உவர் நீர் நிலைகளுக்கு ஏற்றது. திலாப்பியா மீன் வளர்ப்பு இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பரவலாக உள்ளது.
4.ரோகு மற்றும் கேட்லா கெண்டை வளர்ப்பு: இவை இந்தியாவில் பிரபலமான நன்னீர் மீன் இனங்கள். குறிப்பாக நன்கு நிர்வகிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மீன் வளர்ப்பு முறையுடன் இணைந்தால் கெண்டை வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியது.
5.டிரௌட் வளர்ப்பு: குளிர்ந்த நீர் வளங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற பகுதிகளில், இத்தகைய மீன் வளர்ப்பு லாபகரமானதாக இருக்கும். இந்த பகுதிகளில் ரெயின்போ டிரவுட் பொதுவாக வளர்க்கப்படுகிறது.
6.முர்ரல் (பாம்புத் தலை) (Murrel (Snakehead) Farming): பாம்புத் தலை மீன் என்றும் அழைக்கப்படும் முர்ரல், இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மீன் வகைகளில் ஒன்று. இதை நன்னீர் குளங்களில் வளர்க்கலாம் மற்றும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
7.அலங்கார மீன் வளர்ப்பு: அலங்கார மீன் வளர்ப்பு என்பது பழங்காலம் முதலே லாபகரமான சந்தையாகும். மீன் வணிகத்திற்காக கவர்ச்சியான மற்றும் வண்ணமயமான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த வணிகத்திற்கு நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு தேவை என்பதை நினைவில் கொள்க.
8.டுனா வளர்ப்பு: (Tuna Farming) சூரை வளர்ப்பு மிகவும் மேம்பட்ட மற்றும் மூலதனம் மிகுந்த முயற்சியாகும். இது பெரும்பாலும் ஆழ்கடல் அணுகல் உள்ள கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. யெல்லோஃபின் டுனா மற்றும் புளூஃபின் டுனா ஆகியவை ஆர்வத்தின் முதன்மை இனங்கள்.
9.மீனுடன் முத்து வளர்ப்பு: மீன் வளர்ப்புடன் முத்து உற்பத்தி மேற்கொள்ளுவது இந்தியாவின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. முத்து வளர்ப்பு, பொருத்தமான மீன் வகைகளுடன் இணைந்து, லாபகரமான மற்றும் நிலையான வணிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
10.ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு: மற்ற மீன் வளர்ப்பு முறைகளுடன் இறால், நண்டு அல்லது வாத்து வளர்ப்பு போன்றவற்றையும் இணைத்து லாபத்தை அதிகரிக்கலாம். ஒருங்கிணைந்த பண்ணை முறையினை மேம்படுத்துவதுடன், கழிவுகளை குறைக்கவும் முடியும்.
இந்தியாவில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தொடங்கும்போது, நீரின் தரம், இருப்பிடம், வளங்களின் இருப்பு, சந்தைத் தேவை மற்றும் தொடர்புடைய அரசாங்க விதிமுறைகள் போன்ற காரணிகளை முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள். அதன்பின் உள்ளூர் மீன்வளத் துறை அல்லது ,மீன்வளர்ப்பு நிபுணர்களிடமிருந்து உரிய வழிகாட்டுதலைப் பெற்று மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்.
கூடுதலாக, மீன் வளர்ப்பு வணிகத்தின் லாபம் நோய் கட்டுப்பாடு, தீவன மேலாண்மை மற்றும் திறமையான உற்பத்தி நடைமுறைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் காண்க:
பைக் சந்தையில் அதிரடி அம்சங்களுடன் களமிறங்கியது Triumph Scrambler 400 X
மகளிருக்கான ரூ.1000- அக்டோபர் மாதத்தில் 8833 பயனாளிகள் தகுதி நீக்கம்!