1. செய்திகள்

மகளிருக்கான ரூ.1000- அக்டோபர் மாதத்தில் 8833 பயனாளிகள் தகுதி நீக்கம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
kalaignar magalir urimai thittam

தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 5041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 8833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் ஓயாமல் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்பின் அந்த விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கடந்த செப்-14 ஆம் தேதி அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மேல்முறையீடு செய்ய உரிய கால அவகாசம் வழங்கப்பட்டன. அதன்படி தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 10,64,84,06,000- உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

வைக்கோல் விற்பனையில் இம்புட்டு லாபமா? அரசின் பாராட்டைப் பெற்ற விவசாயி

பைக் சந்தையில் அதிரடி அம்சங்களுடன் களமிறங்கியது Triumph Scrambler 400 X

English Summary: 8833 beneficiaries were disqualified in kalaignar magalir urimai thittam Published on: 17 October 2023, 10:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.