இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 May, 2022 12:25 PM IST
Quail Breeding: Get Profit Rs.30,000 per Month

விவசாயிகளால் பெரும்பாலான வகையில் கால்நடை வளர்ப்பு என்பது செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆடு, மாடு, கோழி, மீன், முயல் முதலான பல்வேறு கால்நடைகளும், பறவை இனங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றில் காடை என்பதும் ஒன்று ஆகும். அத்தகைய (Quail Breeding) காடை வளர்ப்பைக் குறித்த முழு குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.

காடை என்பது அதிகம் பறக்க இயலாத பறவையாக இருக்கின்றது. இதைத் தரைப் பறவை என்றும் அழைக்கின்றனர். இந்த காடை வளர்ப்பை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் பல்வேறு மக்கள் செய்து வருகின்றனர். இந்த காடையின் இறைச்சியும், முட்டையும் மிகுந்த சுவை உடையது என்பதைத் தாண்டி அதிகச் சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் காடை வளர்ப்பினை மேற்கொள்ள, இது ஏதுவாக இருக்கின்றது.

வளர்ப்புக் காடைகள் எவை?

பொதுவாக பதினெட்டு காடை இனங்கள் வளர்ப்புக்கு ஏற்றது எனக் கூறப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்டவை இறைச்சிக்கும், சில முட்டைக்கும் என வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கு என வளர்க்கப்படும் இனங்களாக, டக்ஸிடோ (Tuxedo), பரோ (Pharaoh), பிரிட்டிஷ் ரேஞ்ச் (British Range), இங்கிலீஷ் ஒயிட் (English White), மஞ்சூரியன் கோல்டன் (Manchurian golden) ஆகியவையும், இறைச்சிக்கு என பாப் ஒயிட் (Bob White), ஒயிட் ப்ரெஸ்டெட் (White Breasted), இளம் குஞ்சு பராமரிப்பு (Brooding) ஆகியவையும் இருக்கின்றன.

எவ்வளவு முதலீடு தேவை?


அனைத்து இடங்களிலும் காடை வளர்ப்புக்குத் தேவையான காடையை வாங்கும் நிலையில் ஒரு காடையின் விலை ரூ. 6 அல்லது ரூ. 7 என விற்கப்படுகின்றது. சுமார் ஒரு 1000 காடைகளை வாங்கினால் அதிகபட்சம் ரூ. 7,000 தான் தேவைப்படும். அடுத்ததாக காடை வளர்க்க செட் அமைக்க குறைந்த பட்சம் ரூ. 20,000 தேவைப்படும். அதோடு, காடைகளுக்குத் தீவனச் செலவு என்று பார்க்கும் பொழுது சுமார் ரூ. 7,500 எனும் தொகையும், இதர செலவுகளாக ரூ. 4,000 எனும் தொகையும் தேவைப்படும். எனவே மொத்தமாக முதலீடு என்று பார்க்கும் போது ரூ. 40000 எனும் தொகைக்குக் குறைவானதாகத் தான் தேவைப்படும்.

பராமரிப்பு

காடை வளர்ப்பில் குஞ்சு பொரித்தப் பின் குஞ்சிகளைப் பராமரிப்பது மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும். குஞ்சுகள் பொரித்து முதல் மூன்று அல்லது நான்கு வாரங்கள் குஞ்சிகளின் பராமரிப்பு வாரங்கள் ஆகும். இந்த பராமரிப்பில் ஆள்கூளம் அமைக்கும் முறை மிக இன்றியமையாதது ஆகும்.

அதாவது,

  • நன்கு உலர்ந்த மணலை முதலில் கீழே பரப்ப வேண்டும்.
  • அதன் பின் நன்றாக ஈரத்தை உறிஞ்சக் கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவுகளை அதன் மீது பரப்ப வேண்டும்.
  • இவ்வாறு பரப்பக் கூடிய ஆள்கூளமானது, சுமார் 5 முதல் 10 செ. மீ உயரத்திற்கு இருக்க வேண்டும்.
  • அதுவே, கூண்டுகளாக இருந்தால் அடிப்பகுதியில் நல்ல கனமான அட்டையை வைத்து அதன் பின் ஆள்கூளத்தைப் பரப்பிப் பாதுகாக்க வேண்டும்.

காடை எப்போது முட்டையிடும்?

காடை முட்டை உற்பத்தி எனப் பார்க்கும்பொழுது, முட்டை உற்பத்திக்கு வெளிச்சம் மிக முக்கியமானதாகத் தேவைப்படுகிறது. சுமார் ஒரு நாளைக்கு 14 முதல் 18 மணிநேரம் வெளிச்சம் தேவைப்படுகிறது. எனவே, அதற்கேற்றாற்போல மின்சார வசதியை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் காடையானது தனது ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியில் எட்டாவது வாரத்தில் தனது 50% அளவில் முட்டை உற்பத்தியைத் தொடங்குகிவிடுகிறது. ஒரு காடை தனது 22 மாத வயது வரை முட்டையிட்டுக் கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

காடையை எப்போது விற்கலாம்?

ஒரு காடை தனது குஞ்சுப் பருவத்தில் இருந்து சுமார் 28 நாட்கள் வளர்ந்தால் போதும். அது விற்கப்படும் நிலைக்கு வந்துவிடும். அந்நிலயில் அதன் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 30 அல்லது ரூ.35 என விற்கப்படுகிறது. இந்நிலையில் சுமார் 1,000 காடைகளை ரூ. 30,000 முதல் 35,000 வரை விற்கப்படலாம்.

காடை வளர்ப்பைப் பொறுத்தவரை நஷ்டம் இல்லாத தொழிலாகக் காணப்படுகிறது. எனவே, காடை வளர்ப்பை மேற்கொண்டு அதிக லாபத்தினைப் பெற்றுப் பயன் அடையுங்கள்.

மேலும் படிக்க,

விவசாயிகளின் பொருட்களுக்குப் பேருந்துகளில் தனி இருக்கைகள்

சிறுநீரகக் கற்களை இயற்கையாக அகற்றுவது எப்படி? 5 எளிய வழிகள்

English Summary: Quail Breeding: Get Profit Rs.30,000 per Month
Published on: 27 May 2022, 11:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now