கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.10,000
இத்திட்டத்தில் 900 ஆதிதிராவிடா் மக்களுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் மானியமும், 100 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மானியமும் வழங்கிட நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
தகுதி
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராகவும், 18 முதல் 65 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும்.
பயிற்சி
பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை வளா்க்கத் தேவையான பயிற்சி, கையேடு மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் உள்ளிட்டவை ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ. 10,000 என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தொடர்புக்கு
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது 0427 - 2280348 என்ற தொலைபேசி எண்ணிலோத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!