கால்நடைகளைப் பொருத்தவரை, நம் குழந்தைகள் போல பக்குவமாக கவனிக்க வேண்டும். நம்முடைய வாழ்வாதாரமாகத் திகழும் கால்நடைகளைக் (Livestock) காலம் முழுவதும் பராமரிப்பதுடன், நன்றிக்கடன் ஆற்றும் மனப்பாங்கு உள்ளவர்களாக இருப்பதும் முக்கியம். கால்நடைகளுக்கு ஏற்படும் வாயுப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
பசுமைக்குடில் வாயுக்கள்
பசுமைக்குடில் வாயுக்களை (Green house gas) வெளியிடுவதில் மாடுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. அவை வெளியேற்றும் வாயுக்களில், மீத்தேன் பெருமளவு இருப்பது தான் அதற்கு காரணம். மாடுகளின் தீவனத்தோடு (Fodder), சிறிதளவு கடல்பாசியை சேர்த்தால், மாடுகள் வெளியேற்றும் மீத்தேனின் அளவில், 82 சதவீதத்தை குறைக்கலாம் என, 'பிளோஸ் ஒன்' இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.
நம் வளிமண்டலத்திற்குள் வெப்பத்தைத் தேக்கி வைத்து, பூமியை சூடேற்றுவதில், கார்ப்ன் - டை - ஆக்சைடை (CO2) விட, மீத்தேனுக்கு அதிக பங்கு உண்டு. மீத்தேனை வெளியேற்றுவதில் விவசாயத்திற்கு தான் முதலிடம், என்றாலும், மனிதர்கள் உருவாக்கிய பண்ணைகளில் வளரும் கால்நடைகள், 37 சதவீத பங்கு மீத்தேனை வெளியேற்றுகின்றன.
கடல்பாசி
இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு, தீவனத்தில் என்ன மாறுதல்களை செய்தால், அவை வெளியேற்றும் மீத்தேன் வாயுவை குறைக்கலாம் என, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சோதனை செய்தனர். இறுதியில், தீவனத்தோடு, மிகச் சிறிய அளவு கடல்பாசியை (Seaweed) கலந்து கொடுத்தால், பெருமளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்க முடியும் எனத் தெரியவந்தது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!
வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!