Animal Husbandry

Saturday, 09 January 2021 10:27 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்துகளைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரவும் பறவைக்காய்ச்சல்

கேரள மாநிலத்தின் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைக் காய்ச்சல் (bird flu H5N8) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் உள்ளிட்டவை ஒரு கி.மீ. சுற்றளவுக்கு அழிக்கப்பட உள்ளன.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நெடுமுடி பஞ்சாயத்து, தகழி, பள்ளிபாடு, கருவட்டா பஞ்சாயத்துகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பஞ்சாயத்திலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்கு ஆளான கோழிகளை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கண்காணிப்பு (Surveillance in Tamil Nadu)

இதனையடுத்து, கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி மற்றும் தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
26 தற்காலிக சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு கண்காணிக்கப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழி சார்ந்த அனைத்து பொருட்களும் தமிழக எல்லைக்குள் நுழையாதவாறு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!

ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)