Animal Husbandry

Thursday, 25 February 2021 05:47 PM , by: Elavarse Sivakumar

Credit : The Motley Pool

கறவை மற்றும் எருமைகளில் இனப்பெருக்க மேலாண்மை குறித்த 6 நாள் பயிற்சி கரூரில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டிய முன்பதிவு செய்து பயனடையலாம்.

கரூர் மாவட்ட ஊரக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம், புதுகோட்டை மற்றும் கரூர் மாவட்ட ஆட்மா திட்டத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை அளிக்கிறது.

6 நாள் பயிற்சி (6 Days Training)

இதில் கறவை மாடு மற்றும் எருமைகளில் இனப்பெருக்க மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஆறு நாட்கள் (15.03.2021 முதல் 20.03.202) வரை இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியின் சிறப்புஅம்சங்கள் (Features of training)

இப்பயிற்சியில் கறவை மாடு வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், புதிய தீவன ரகங்கள் மற்றும் உற்பத்தி முறைகள் பண்ணை உபகரணங்கள், அசோலா மற்றும் ஹைட்ரோ போனிக் தீவன வளர்ப்பு முறைகள், மதிப்பூட்டிய பால் பொருட் களை தயாரித்தல், கன்று வளர்ப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் மற்றும் சுத்தமான பால் உற்பத்தி ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களின் விரிவுரை, செயல் முறை விளக்கம், முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள் படக்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடு, தேநீர் மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும், மேற்படி பயிற்சியில் 18 முதல் 40 வயதுள்ள குறைந்தது கந்தாம் வகுப்பு வரை படித்த கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு (Contact)

பயிற்சி பெற விரும்புபவர்கள், பல்கலைக்கழக அலுவலகத்தை நேரிலோ,  கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் (Karurvutrc@tanuvas.org.in) அல்லது அலைபேசி எண்:73390 57073. தொலைபேசி எண் : 04324 294335 ல் ஆதார் அடையாள அட்டையுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

முன்பதிவுக்கு கடைசிநாள் (Last day for booking)

முன்பதிவு செய்ய  12.03.2021கடைசி நாள் ஆகும். இத்தகவலை கரூரில் மண்மங்கலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க....

கோடைகாலத்தில் பயிரிட உகந்த பயிர்கள் எவை?

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயத்தில் கவனம் செலுத்தும் தமிழக அரசு! - இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)