சேலம் மாவட்ட வேளாண் மக்களின் நலுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகில், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகிறது.
உழவு தொழிலுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிக அளவில் கவனத்தை ஈர்க்கும் தொழிலாக மாறி வருகிறது. மேலும் இதற்கென சரியான பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கால்நடை குறித்து ஒரு முக்கிய பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விபரங்கள் பின்வருமாறு.
இம்மையம் கால்நடை வளர்ப்பில் பல புதிய தொழில் நுட்பங்களையும், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சம்பந்தபட்ட இதர தொழில் நுட்பங்களையும், ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமான விவசாயிகள் என அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகளை அளித்து உதவி புரிந்து வருகிறது.
அவ்வகையில், இம்மையத்தில் வரும் வியாழக்கிழமை 14-07-2022 அன்று வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பயிற்சியும், அடுத்த வியாழன்று 21-07-2022 வெண் பன்றி வளர்ப்பு பயிற்சியும் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம், தொலைப்பேசி எண்: 0427-2410408 தொடர்புக் கொள்ளவும்.
மேலும் படிக்க:
Weather Update:தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!