இந்தியாவில் வேலை பார்க்கக் கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கி இருப்பதாக, சி.ஐ.சி., எனும், கடன் தகவல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான வாழ்க்கை (Quiet life)
எளிமையான வாழ்க்கை, எவரிடமும் கடன் வாங்காமை என பல்வேறு கொள்கைகளுடன் வாழ்பவர்கள் இன்றும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழத்தான் செய்கிறார்கள்.
அனைத்தும் EMIயில் (All in EMI)
ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஆடம்பர வாழ்க்கையே அத்தியாவசியமாகக் கருதப்படுவதால், அனைத்திற்கும் EMI கட்டவேண்டிய நிலையும் கட்டாயமாகிவிட்டது.
கடனுக்காகவே வேலை (Work for credit)
இந்நிலையில், இந்தியாவில் வேலைபார்ப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தாங்கள் வாங்கியுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கடனுக்காகவே வேலைக்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சி.ஐ.சி.(CIC) என்னும், கடன் தகவல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
20 கோடி பேர் கடனாளிகள் (20 crore people are debtors
நாட்டில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, மொத்தம், 40.07 கோடி பேர் ஆகும். இதில், சில்லரை கடன் சந்தையில் கிட்டத்தட்ட, 20 கோடி பேர் கடன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள், குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அதிக ஆர்வம் (More interested)
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நிறுவன கடன்கள் விஷயத்தில், வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அவை சில்லரை கடன் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளன.
8 சதவீதம் (8 percent)
ஆனால், கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின், சில்லரை கடன் பிரிவில் ஏற்பட்டு வரும் பின்னடைவு, சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி, கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில், 18 - 33 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கடன் வழங்குவது, 8 சதவீதமாக மட்டுமே உள்ளது தெரியவந்துள்ளது.
பெண்களின் பங்கு (The role of women)
மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட, புதிதாகக் கடன் வாங்கும் நபர்கள், தனிநபர் கடன் அல்லது நுகர்பொருள் கடன்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடன் வாங்குபவர்களில், பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
வீட்டுக்கடன் (Home loan)
வாகனக் கடனை பொறுத்தவரை, இவர்களது பங்களிப்பு, 15 சதவீதமாக இருக்கிறது. வீட்டுக் கடனை பொறுத்தவரை, 31 சதவீதமாகவும், தனிநபர்கடன், 22 சதவீதமாகவும், நுகர்பொருள் கடன், 25 சதவீதமாகவும் இருக்கிறது.
முதல் நிறுவனம் (First company)
மேலும், புதிதாகக் கடன் பெறுவோர், தங்களுக்கு முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனத்திற்கே அதிக விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மனதில், முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனம் குறித்து, சாதகமான சிந்தனை இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!