1. செய்திகள்

4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
4 crore ration cards canceled - cardholders shocked!

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாததால், நாடு முழுவதும், சுமார் நான்கு கோடி ரேஷன் கார்டுகள் ரத்து (Ration Card Cancellation) செய்யப்பட்டுள்ளன. இந்த ரேஷன் கார்டுகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டன.

மத்திய அரசு நடவடிக்கை (Federal Government action)

நாட்டின் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில், ஏழை மக்களின் பசியாறுவதற்காக மானிய விலையில், அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா நெருக்கடிக் காலங்களில்கூட, ஏழைகள் யாரும் உணவின்றி வாடக்கூடாது என்பதற்காக, இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

கொரோனா நிவாரணம் (Corona relief)

இதேபோல், மாநில அரசுகளும், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா தொற்று நிவாரணத் தொகையையும் அறிவித்து வழங்கின.

கால அவகாசம் (time period)

இதனிடையே ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அறிவுறுத்திய மத்திய அரசு, அதற்கு கால அவகாசமும் வழங்கியது.

4 கோடி ரேஷன் அட்டைகள் (4 crore ration cards)

இதன் தொடர்ச்சியாக தற்போது நாடு முழுவதிலும் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இவ்வளவு பெரிய அளவிலான ரேஷன் கார்டுகள் (Ration Card) ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் ஆதார் அட்டை (Aadhaar Card) என்று கூறப்படுகிறது. ஆதார் அட்டைகள் மற்றும் பயோமெட்ரிக் (Ration Card-Aadhaar Card Link) காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்ததால் நாட்டில் சுமார் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மட்டத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன,  ஒவ்வொரு மாநில அளவில் 10 முதல் 15 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

அடங்காத வெள்ளை ஈக்கள்- பாதுகாக்க உதவும் உயிரியல் கட்டுப்பாடு!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

English Summary: 4 crore ration cards canceled - cardholders shocked!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.