சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 November, 2024 4:50 PM IST
Japanese mint cultivation
Japanese mint cultivation

ஜப்பான் நாட்டிலிருந்து நமது நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், இது ஜப்பான் புதினா என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் கீரைக்காவும் மற்றும் வணிக ரீதியாகவும் புதினா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. புதினாவில் காணப்படும் மென்தால் ஆண்டுதோறும் சுமார் 25,000 டன்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் சுமார் 12000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது.

நீராவி வடிப்பு முறை மூலம் புதினா இலையிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு மென்தால் எனும் மருந்துப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது உணவுப்பொருள்களில் மணம் மூட்டுவதற்கும், மருந்துப்பொருள்களில் செரிக்கும் சக்தியை மேம்படுத்தவும், செரியாமைக் கோளாறு, வாயுக்கோளாறு, வயிற்றுவலி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிப்பு வகைகளில் மென்தால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தொண்டைக் கரகரப்பை உடனடியாகச் சரிசெய்து தொண்டைக்கு இதமான தன்மையை ஏற்படுத்தும்.

இரகங்கள்:

புதினாவில் எம்.ஏ.ஏஸ்-1, எச்.ஓய்-77, எம்.ஏ.எச்-03, எஸ்.எல்.-05, எம்.எஸ்.எஸ்-5, ஆர்.ஆர்.எல்-18, சிவாலிக் மற்றும் சுப்ரியா ஆகிய இரகங்கள் உள்ளன. இவற்றில் ஆர்.ஆர்.எல்.-118 இரகத்தில் அதிக அளவு எண்ணெய்ப் பொருள் காணப்படுகிறது (80-90 சதவீதம் மென்தால்).

மண்வளம்:

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண் கலந்த பொறைமண், செம்மண் மற்றும் கரிசல் மண் வகைகளில் நன்கு வளரும். இப்பயிருக்கேற்ற மண்ணின் கார அமிலத் தன்மை 6.9 முதல் 7.0 வரை ஆகும்.

தட்பவெப்ப நிலை:

இப்பயிர் சாகுபடிக்கு குளிர்ச்சியான பருவநிலையே உகந்தது. ஏனெனில், இங்கே விளையும் புதினாவில் தான் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருக்கும். மித வெப்பம் மற்றும் வெப்பமான பகுதிகளில் இலை மகசூலும் எண்ணெய்ப் பொருள் உற்பத்தியும் குறைவாக இருக்கும். ஆண்டு மழையளவு 100 முதல் 150 செ.மீ இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, ஆனைமலை மற்றும் கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகளில் இலாபகரமாக சாகுபடி செய்யலாம். தற்போது பாசன வசதியுள்ள சமவெளிப்பகுதிகளிலும் பயிர்செய்யப்பட்டு வருகிறது.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை நன்றாக உழவு செய்து மண் கட்டிகள், கற்கள் மற்றும் களைகளை அகற்ற வேண்டும். எக்டருக்கு 25 டன் தொழு எரு இட்டு நிலத்தைப் பண்படுத்த வேண்டும். பிறகு 60 செமீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

இடைவெளி:

புதினாவை நடவு செய்யும்போது, செடிக்குச்செடி 45 செ.மீ இடைவெளி இருக்குமாறும், வரிசைக்கு வரிசை 60 செமீ இடைவெளி இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்ய சுமார் 37,000 செடிகள் தேவைப்படும்.

நடும் பருவம்:

ஜூன்-ஜூலை மாதங்களில் வேர்ச்செடிகள் அல்லது நுனித் தண்டுகளை நடவு செய்வதன் மூலம் அதிக மகசூலைப் பெறலாம்.

இடைவெளி:

புதினாவை நடவு செய்யும்போது, செடிக்குச்செடி 45 செ.மீ இடைவெளி இருக்குமாறும், வரிசைக்கு வரிசை 60 செமீ இடைவெளி இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்ய சுமார் 37,000 செடிகள் தேவைப்படும்.

நடவுமுறை

வேர்ச்செடிகளை 10-12 செ.மீ நீளமாக வெட்டி பார்களின் பக்கவாட்டில் 7 முதல் 10 செமீ ஆழத்தில் செடிகளை நடவேண்டும். செடிகளைச் சுற்றி மண்ணை நன்றாக அணைக்க வேண்டும்.

Read also: உணவு பழக்க முறையில் கேழ்வரகு ஏன் அவசியம்? அது செய்யும் மேஜிக் தெரியுமா?

அறுவடை:

செடிகளை நட்ட நான்காவது மாதத்தில் இலைகளை அறுவடை செய்யலாம். இந்தத் தருணத்தில் செடிகளில் பூக்கள் இருக்கும். தரைமட்டத்திலிருந்த 5 செமீ உயரத்தில் முழுச் செடியையும் வெட்டி எடுக்கலாம். 24 மணி நேரத்திற்குத் தண்டுகளையும், இலைகளையும் இலேசாக உலர வைத்து பிறகு நீராவி வடிப்புக்கு உட்படுத்தி எண்ணெய் பிரித்தெடுக்கலாம். அதிக அளவு எண்ணெய் பொருள் கிடைப்பதற்கு நல்ல சூரிய ஒளி இருக்கின்ற நாட்களில் இலைகளை அறுவடைசெய்ய வேண்டும்.

இரண்டாவது மற்றும் அடுத்த அறுவடைகளை 60 முதல் 70 நாட்கள் இடைவெளியில் எடுக்கலாம். நவம்பர் - டிசம்பர் மாதங்களில் செடிகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும். ஒரு எக்டருக்கு 24 முதல் 30 டன் இலைகள் மகசூலாகக் கிடைக்கும் இவற்றிலிருந்து 100 முதல் 150 கிலோ எண்ணெய் பொருள் கிடைக்கிறது.

இக்கட்டுரை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புதினா சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மற்ற கேள்விகளுக்கு கட்டுரை ஆசிரியர் முனைவர் இரா.ஜெயவள்ளி., (உதவிப்பேராசிரியர்,தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி ) அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். அலைப்பேசி எண்: 94876 16728.

Read more:

20 சதவீத ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு- விவசாயிகளுக்காக தேதி நீட்டிப்பு!

நிழல்வலைக்கூடத்தில் CO 18009 புன்னகை கரும்பு இரக நாற்று உற்பத்தி- 50% மானியம்!

English Summary: Farmers must need to know about Japanese mint cultivation
Published on: 20 November 2024, 04:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now