PM Kisan 13-வது தவணை வரும் தேதி வெளியீடு, பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு, நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள், விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க, 100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை என்ற அறிவிப்பு பற்றிய விளக்கம், கறிக்கோழி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 14 ரூபாய் சரிவு ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!
1. PM Kisan 13-வது தவணை வரும் தேதி வெளியீடு!
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியின் 13-வது தவணை அடுத்த வாரம் விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 13-வது தவணைத் தொகை அடுத்த வாரம், அதாவது ஜனவரி 23ம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது என்பது நினைவுகூறத் தக்கது.
மேலும் படிக்க: Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவு! ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்!
2. பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் அறிவிப்பு!
பெண் ஓட்டுனர்கள் மானிய விலையில் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கி முழுமையாக பூர்த்தி செய்து திருவண்ணாமலை காந்திநகர் 8-வது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!
3. நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள்!
நாமக்கல் மாவட்டம் எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர். கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஆயிரம் மெட்ரிக் டன் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். 2021 - 2022ம் ஆண்டில் 116 விவசாயிகளிடம் இருந்து 626 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில் தற்போது இந்த ஆண்டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று எருமைப்பட்டியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் என மாவட்டத்தில் இரண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிறப்பான ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்கள்! இன்றே அப்ளை பண்ணுங்க!!
4. விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க!!
FPO என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு ஆகும். இது விவசாயத்தை அமைப்பு சாரா துறையிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றும். ஆனால் FPO அமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களால் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான ஊடகங்கள் இதுவரை பெரிதாக இல்லை. ஆனால், தற்பொழுது கிரிஷி ஜாக்ரனால் ஜனவரி 24 முதல் அதிகாரப்பூர்வமாகக் கிரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.
5. 100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை என்ற அறிவிப்பு பற்றிய விளக்கம்!
500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் மின்சாரம் கிடையாது என்ற குறுஞ்செய்தி அனைவரது தொலைபேசிக்கும் பரவி வரும் நிலையில், தமிழ்நாடி மின்சார வாரியம் இதற்கு விளக்கமளித்துள்ளது. அந்த போலி செய்தியை பகிர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியம், “இந்த குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் போலி. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
6. கறிக்கோழி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 14 ரூபாய் சரிவு!
நாமக்கல்லில் கடந்த மாதம் கறிக்கோழி விலை வேகமாக உயர்ந்து உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை மாற்றம் இல்லாமல் கடந்த 9-ம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 108 ரூபாயில் இருந்து 6 ரூபாய் விலை குறைந்து உயிருடன் ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 நாட்களாக விலையில் மாற்றம் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உயிருடன் 88 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க
தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!
TN மீன்பிடி கப்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மோதல்!