காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து,நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
தமிழகத்தில் ரூ. 7 கோடியே 50 லட்சம் செலவில் தொழில்முனைவோா் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கனி விதை உற்பத்திக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவியாக விதைச் சான்றிதழ் பெறுவதற்கும், விதைக் கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளவும், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படும்.
-
குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.
-
ஒரு ஹெக்டேரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்வதற்கு 30 சதவிகிதம் மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1200-ம், 9 க்கு 6 மீ அளவு கொண்ட ஒவ்வொரு சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்திற்கு 50 சதவித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.
-
இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கும் விவசாயிகள் திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களையோ தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?