வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-2023ஆம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து 132 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தேர்வு செய்த கிராம ஊராட்சி பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணிணி புலமையுள்ள பட்டாதாரிகள் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில்கள் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ரு.1லடசம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டமானது, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் உற்பத்தியை பெருக்க வேளாண் பட்டதாரிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். மேலும் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகிக்கலாம்.
2022-2023ஆம் ஆண்டிற்கான பயனாளிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைந்துள்ள 132 கிராம ஊராட்சிகளுக்குள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25 சதவீத மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறலாம்.
10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சானிறிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு நகல், வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவர் எனில் அதற்குண்டான ஆவணங்கள், திட்ட அறிக்கைகள் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பங்கள் மற்றும் திட்ட அறிக்கை 15-08-2022ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: