1. விவசாய தகவல்கள்

TNAU: தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி, குறைந்த முதலீட்டில் லாபகரமான தொழில்

Deiva Bindhiya
Deiva Bindhiya
TNAU: Training on Beekeeping, Profitable business with low investment

சிறு தொகையை முதலீடாக செய்து, நல்ல லாபம் ஈட்டும் விவசாயத் தொழில்களில் தேனீ வளர்ப்பும் ஒன்றாகும், அந்த வகையில் அதற்கான சரியான இன தேர்வு ஆகியவற்றை நீங்கள் அறிந்திடுதல் வேண்டும். அரசு வழங்கும் பயிற்சி முகாம்களில் பங்கேற்று, இதைப் பற்றிய முழு விவரம் அறியலாம். எனவே, TNAU ஏற்பாடு செய்திருக்கும் தேனீ வளர்ப்பு பயிற்சி பற்றிய தகவலை, இந்தப் பதிவு விளக்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), கோயம்புத்தூரில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேளாண் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த பயிற்சி, ஏற்பாடு செய்கிறது. 2022 ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சி வரும் 08.08.2022 (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனீ வளர்ப்பின், அத்தியாவசிய அம்சங்களை இந்த பயிற்சி வழங்கும்:

  • தேனீ இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேனீக்களின் சமூக அமைப்பு
  • இந்திய தேனீக்களை பெட்டிகளில் வளர்ப்பது, பொது மற்றும் பருவ மேலாண்மை
  • தேனீ தீவனம், குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களின் மகசூல் அதிகரிப்பு
  • தேன் பிரித்தெடுத்தல்
  • தேனீக்களின் எதிரிகள் மற்றும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை

மேலும் படிக்க: தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

தேதி மற்றும் இடம்:

08-08-2022 அன்று நடைபெறும், ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வருகை தர வேண்டிய முகவரி தமிழ்நாடு பூச்சியியல் துறை, TNAU, கோவை - 641-003, தமிழ்நாடு.

பயிற்சி நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அடையாள அட்டை அவசியம் என்பது குறிப்பிடதக்கது. அடையாள அட்டை இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்படாது.

பயிற்சிக் கட்டணம்:

பயிற்சிக் கட்டணம் ரூ.590/- (ரூபாய் ஐந்நூற்று தொண்ணூறு மட்டுமs) பயிற்சி அன்று செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடதகக்கது.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641 003.

தொலைபேசி: 0422-6611214
மின்னஞ்சல்: entomology@tnau.ac.in.

மேலும் படிக்க:

தமிழகம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 3 நாள் உணவுத் திருவிழா 2022

India Post Recruitment 2022: சம்பளம் 35k, இன்றே விண்ணப்பியுங்கள்!

English Summary: TNAU: Training on Beekeeping, Profitable business with low investment Published on: 06 August 2022, 02:22 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.