Central

Monday, 20 June 2022 10:01 AM , by: Poonguzhali R

2 Rupees to Rs. Federal Government Plans to Receive 36,000 Pension!

மத்திய அரசானது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்பது அமைப்பு சாரா துறை தொழிலாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தினைக் குறித்த முழுவிவரங்களையும், எவ்வாறு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும் இப்பதிவு விளக்குகிறது.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தின்கீழ் தெருவோர வியாபாரிகள், ரிக்‌ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாராத் துறையில் தொடர்புடையவர்கள் தங்கள் முதுமைப் பருவத்தைப் பாதுகாக்க இயலும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் அரசானது, தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு வெறும் 2 ரூபாய் சேமித்தால் போதும். ஆண்டுக்கு 36000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.

மேலும் படிக்க: தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதாவது, ஒரு மாதத்திற்கு 55 ரூபாய் டெபாசிட் செய்தல் வேண்டும். இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, ​​ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயது இருக்கும்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36000 பென்ஷன் பெறலாம். ஒருவர் 40 வயதிலிருந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்தல் வேண்டும். அதன்படி 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்கலாம். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் பெற ஏதுவாக இருக்கும். அதாவது வருடத்திற்கு 36000 ரூபாய் எனும் அளவில் பெறலாம்.

மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு

தேவையான ஆவணங்கள்

  • சேமிப்பு வங்கிக் கணக்கு
  • ஆதார் அட்டை
  • இருப்பிடச் சான்று

(குறிப்பு: 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். மேலும் 40 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.)

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய விதிமுறைகள் இதோ!

எவ்வாறு பதிவு செய்வது?

  • பொது சேவை மையத்தில் (சிஎஸ்சி) திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • சிஎஸ்சி மையத்தில் உள்ள போர்ட்டலில் தொழிலாளர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு இணையதள போர்ட்டலை உருவாக்கியுள்ளது.
  • இந்த மையங்கள் மூலம் ஆன்லைனில் அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்கு அனுப்பப்படும்.

மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!

யாரெல்லாம் பெறலாம்?

  • பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அமைப்புசாரா துறைத் தொழிலாளி பயனடையலாம்.
  • 40 வயதுக்குக் குறைவான வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • இதுவரை அரசாங்கத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களும் பயன்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கூடிய நபரின் மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

இந்தத் திட்டத்திற்காகத் தொழிலாளர் துறை அலுவலகம், எல்ஐசி, இபிஎஃப்ஓ ஆகியவை அரசாங்கத்தால் ஷ்ராமிக் வசதி மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இங்கு செல்வதன் மூலம் இத்திட்டம் குறித்த தகவல்களை தொழிலாளர்கள் பெறலாம் என்று கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க

சிறுநீரகக் கற்களை நீக்க இயற்கையான ஐந்து வழிகள்

பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)