பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் திட்டம் என்பது பிரதான் மந்திரி சிலை இயந்திர யோஜனா திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மத்திய அரசு இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கலாம் என்பது கூடுதல் நன்மை ஆகும். தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்பும் பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000 பெண்களுக்கு கிடைக்கிறது எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த திட்டம் யாருக்கு?
கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்புப் பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- பிறந்த தேதிச் சான்றிதழ்
- வருமானச் சான்று
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- மொபைல் எண்
(குறிப்பு: விண்ணப்பதாரர் ஊனமுற்றவராக அல்லது விதவையாக இருந்தால், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும்.)
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- இத்திட்டத்திற்கு ஆன்லைலின் விண்ணப்பிக்கலாம்.
- முதலில், www.india.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- அதன் பின்பு, இலவச தையல் இயந்திரத்தைப் பெற, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- அதன் பிறகு, விண்னப்பதாரரின் விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
மேலும் படிக்க: செகண்ட் ஹேண்ட் பைக்கை வாங்குபவரா நீங்கள்? மக்களே உஷார்!
செயல்முறை என்று பார்க்கும் போது, விண்ணப்பப் படிவத்தை அங்கீகரிக்கப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பம் முதலில் சரியான் தகவல்களுடன் இருக்கின்றதா என மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சரிபார்ப்பார். அதைத் தொடர்ந்து, இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.
இத்திட்தத்தில் பயன் பெறத் தகுதி
பிரதான் மந்திரி இலவச தையல் இயந்திரத் திட்டம் 2022 க்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: TNUSRB SI Admit Card 2022 வெளியாகியது: நேரடி இணைப்பு உள்ளே!
இத்திட்டத்தின் கீழ் 12,000. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க:
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் திட்டம், எப்படி விண்ணப்பிப்பது?
தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!