பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையைச் செலுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா? உங்கள் கணக்கு இருப்பு நிலை குறித்து அறிவது எப்படி, என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
PM-Kisan திட்டம்
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான 6-வது தவணையை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதன் மூலம் 8.5 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசு ரூ.2000 வீதம் செலுத்தியுள்ளது.
புதிதாக விண்ணப்பித்த விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டீர்களா? இல்லையா? என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அறிந்துகொள்ளுங்கள்
-
விவரங்களை அறிய முதலில் www.pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
-
வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் "Farmers Corner” என்பதை கிளிக் செய்யுங்கள்
-
அங்கு கிடைக்கும் தொகுப்புகளில் "Beneficiary List” என்பதை தேர்வு செய்யுங்கள்.
-
பின் அதில் உங்கள் மாநிலம் , மாவட்டம், போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்
-
அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட பிறகு "Get Report” என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
அதில் உங்கள் பகுதியில் PM-Kisanல் இணைந்திருப்பவர்களின் முழு பட்டியலையும் காண முடியும்
நேரடியாகப் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
விடுபட்டவர்களின் கவனத்திற்கு
முழுமையற்ற விண்ணப்பம் அல்லது தவறான ஆதார் விவரங்கள் போன்ற காரணத்தால் சில விவசாயிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம், அதனை Farmers Cornern-ல் புதுப்பிப்பு /மாற்றங்களை செய்து கொள்ளலாம்
உங்கள் கணக்கு நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?
-
உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்
-
முகப்புப்பக்கத்தில் "Farmers Corner" என்பதைக் கிளிக் செய்க.
-
இப்போது ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்க.
-
உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்
-
பிறகு "Get Date" என்பதை கிளிக் செய்க
-
இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.
உங்கள் கணக்கு இருப்பு நிலை குறித்து தகவலை நேரடியாக அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்
தவணை கிடைக்கவில்லையா?
நிதி உதவு பெற தகுதி பெற்றிருந்தும் உங்களுக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் பலனைப் பெறமுடியவில்லை என்றால், நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம், ஆதார் அட்டையில் உங்கள் பெயர் வங்கிக் கணக்கிலிருந்ததைவிட வித்தியாசமாக இருக்கலாம்.
இதனை நீங்கள் www.pmkisan.gov.in வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரி செய்துகொள்ள முடியும், உங்கள் பெயர் தவறாக இருந்தால் மட்டுமே அதை ஆன்லைனில் சரிசெய்ய முடியும். வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் வேளாண்மைத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.
PM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!!
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!