பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 May, 2023 5:45 PM IST
Collector invites fish farmers to benefit from PMSSY scheme

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயன்பெற மீனவ பயனாளி/மீனவ விவசாயிகளிக்கு காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கீழ் வரும் நலத்திட்டங்களில் தகுதியான மீனவ விவசாயிகள் பயன்பெறலாம். திட்டங்கள் விவரம் பின்வருமாறு-

  • குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் வளர்த்தல்) ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • மீன் விற்பனை அங்காடி (அலங்கார மீன் வளர்ப்பு/மீன்அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் மீன் வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கான செலவினமான ரூ.14.00 இலட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
  • ரூ.73,721/- மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115. (கைப்பேசி எண்.84891 89720) அலுவலகத்தை தொடர்பு கொண்டு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

pic courtesy:janprahar.com

மேலும் காண்க:

RTE சட்டம்- LKG, 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை? கடைசி தேதி எப்போ?

English Summary: Collector invites fish farmers to benefit from PMSSY scheme
Published on: 15 May 2023, 05:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now