1. மற்றவை

RTE சட்டம்- LKG, 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை? கடைசி தேதி எப்போ?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Last date to apply for LKG, Class 1 under RTE Act is 18th May

தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் (RTE சட்டம், 2009)-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1) (சி)-யின் படி 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கு 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் அதாவது எல்.கே. ஜி.முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும், 1ஆம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பிலும் சேர்க்கைக்கு 20.04.2023 முதல் 18.05.2023 வரை rte.tnschools.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

18.05.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் 21.05.2023 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும்.

மேற்காண் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  1. பிறப்புச் சான்றிதழ்.
  2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.
  3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.
  4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.
  5. இருப்பிடச் சான்று.

பெற்றோர்கள்/விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட பள்ளியில் 23.05.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.05.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.

இது சார்ந்து பெற்றோர்கள் / விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் தகவல்களைக் கேட்க விரும்பினால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார்பள்ளிகள்) அணுகவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

pic courtesy: krishijagran

மேலும் காண்க:

TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க

English Summary: Last date to apply for LKG, Class 1 under RTE Act is 18th May Published on: 15 May 2023, 03:13 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.