வங்கிக் கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட்டது. கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தில் மூலம் இது வரை 40.29 கோடி பேர் வங்கிக் கணக்கை துவக்கியுள்ளனர்.
PMJDY திட்டத்தின் நன்மைகள் - Benefits of Jan Dhan Account
-
வங்கி கணக்கும் இல்லாத நபருக்காக இதன் மூலம் சேமிப்பு கணக்கு திறக்கப்படுகிறது.
-
ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
-
PMJDY கணக்குகளில் வைப்புத்தொகைக்கு வட்டி பெறப்படுகிறது.
PMJDY கணக்கு வைத்திருப்பவருக்கு Rupay டெபிட் கார்டு வழங்கப்படுகிறது
-
28.8.2018-க்கு பின் புதிதாக கணக்கு திறந்தவர்களுக்கு விபத்து காப்பீடு ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஓவர் டிராஃப்ட் (OD)மூலம் ரூ.10000 வரை எடுத்துக்கொள்ள முடியும்.
ரூபாய் 30,000/- வரை ஆயுள் பாதுகாப்பு, பயனாளியின் மரணம் குறித்த தகுதி நிபந்தனைகளை நிறைவுசெய்ததும் கிடைக்கிறது.
-
PMJDY கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) எதுவும் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் காசோலை புத்தகம் (chequebook) வசதி உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும்
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் - Document Required
-
ஓட்டுநர் உரிமம்
-
ஆதார் அட்டை
-
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை
-
கடவுச்சீட்டு (Passport)
-
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)
-
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்)
வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி? - How to open jan dhan account
-
பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
-
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC (Know your coustomer) விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
-
நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.
-
உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்களது ஜன்தன் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.
மேலும் படிக்க...
படித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்!!
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!