Krishi Jagran Tamil
Menu Close Menu

படித்த இளைஞர்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசின் NEED திட்டம்!! - தெரியுமா உங்களுக்கு?

Monday, 24 August 2020 05:37 PM , by: Daisy Rose Mary
New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS)

credit: Thozhil yaugam

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் கடன் ரூ.5 கோடி வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

NEED திட்டம் என்றால் என்ன?

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உறிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு (New Entrepreneur cum Enterprise Development Scheme) என்ற புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது, மாவட்ட தொழில் மையம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் திட்டம் தயாரிக்க தேவையான உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் செய்து தருகிறது.

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் - Qualifications

 • பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியுடையவர்கள்.

 • இதில் ஆண்டு வருமானம் ஏதுமில்லை

 • முதல் தலைமுறையினர் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம்

New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS)

நிபந்தனைகள் - Age criteria

வயது வரம்பு :

 • பொது பிரிவினருக்கு 21 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை இருத்தல் வேண்டும்.

 • சிறப்பு பிரிவினர்களான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ட வயது வரம்பு 45 என நிர்னயிகப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் - Guideliness

இத்திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் துவங்கலாம்.

பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும்.

வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
கடனுக்கு மானியமும் உண்டு

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி விளக்கம் பெறலாம்.

மேலும் படிக்க..

பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!

5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!

NEED திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தொழில் கடன் தொழில் முனைவோர் New Entrepreneur cum Enterprise Development Scheme (NEEDS)
English Summary: Tamil Nadu Government NEED scheme to provide loans of up to Rs 5 crore to educated youth

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. புயல் நேரத்தில், விவசாயிகளுக்கு உதவ வேளாண் குழு அமைப்பு!
 2. கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்
 3. கஜா புயலை விட நிவர் புயல் தாக்கம் குறைவு! மீட்புப் பணியில் பேரிடர் மீட்பு படை!
 4. ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!
 5. Cyclone Nivar : நெருங்கும் "நிவர் புயல்" - பயிர்க் காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்!!
 6. Nivar cyclone : அதிதீவிர புயலாக மாறிய "நிவர் புயல்" - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!!
 7. பூச்சிகளை விரட்டும் "நீமஸ்த்ரா" இயற்கை பூச்சிக்கொல்லி! - எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!
 8. உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!
 9. நெல் வரப்புகளில் உளுந்து பயிரிட்டால், 50% மானியம்- விபரம் உள்ளே!
 10. Cyclone Nivar : வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்...! தீவிரம் அடையும் மழை!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.