தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம், பள்ளி மாணவர்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கான ரூ. 6000 ஊக்கத்தொகையினை வழங்குகிறது. இந்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையினை எவ்வாறு பெறலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? யார் தகுதியானவர்கள் போன்ற தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம் என்பது இந்திய அஞ்சல் துறையின் சார்பில் 3 நவம்பர் 2017 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்டது. கணக்கு வைத்திருக்கும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தீன் தயாள் ஸ்பர்ஷ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இது தபால்தலை சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஒரு முக்கிய பொழுதுபோக்காக ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, அகில இந்திய அளவில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்ட எழுத்து வினாடி வினா நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்தியாவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். அதோடு, அந்தப் பள்ளியில் முத்திரை சேகரிப்பு மன்றம் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அந்த நிலையில் சம்பந்தப்பட்ட விண்ணப்பிக்கும் மாணவர் அந்த மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒரு மாணவர் தபால்தலை சேகரிப்பு சங்கம் இல்லாத பள்ளியில் படிக்கிறார் எனில், அவர்கள் தங்களது சொந்த தபால்தலை சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் முத்திரை சேகரிப்பில் முன்னோடியாக அறிவிக்கப்பட்டு, பள்ளி முழுவதும் தபால் தலை சேகரிப்பு மன்றத்தை உருவாக்க உதவி செய்யப்பெறும். மேலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அதை எப்படி பொழுதுபோக்காகத் தொடர்வது மற்றும் ஈடுபடுத்துவது ஆகியன குறித்த ஆலோசனை வழங்கப்படும்.
மேலும் படிக்க
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!