சிறு, குறு உற்பத்திகள், பிற சேவைகள், வியாபாரம் சார்ந்த தொழில்கள் போன்றவற்றிற்கு, எந்த வகையான சொத்துப் பணயம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தைக் குறித்த முழு விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.
எந்த வகையான சொத்துப் பணயம் இன்றி ரூ 10 லட்சம் வரைப் பெறும் இந்த திட்டத்தின் பெயர் முத்ரா திட்டம் ஆகும். இந்த முத்ரா திட்டத்தில் இணைய என்ன தகுதி வேண்டும், எத்தகைய ஆவணங்கள் வேண்டும், எவ்வாறு பயன் பெறலாம் போன்ற தகவல்களை இப்பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY) என்று அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க குறுதொழில்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட திட்டமாகும். இதன் முக்கிய பணி என்பது தனியார் குறுந்தொழில்களை மேம்படுத்தும் பொருட்டு, நிதிகளை வழங்குவது ஆகும். முத்ரா திட்டத்தின் மூலம் 50,000 முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம். ஆனால் பணமாகக் கடன் வழங்கப்படாது. தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் முதலானவையாகக் கடன் வழங்கப்படும். இதன் மூலம் கடன் தொகைக்கான முத்ரா கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் விண்ணப்பதாரர்கள் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
யாரெல்லாம் பெறலாம்?
உற்பத்தி, வியாபாரம் சார்ந்த தொழில் செய்வோர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். எடுத்துக்காட்டாக, தொழிலுக்குத் தேவையான வாகனங்கள் வாங்குதல், சிற்றுண்டி உணவுக்கடை அமைத்தல், ல்பழக்கடைகள், துணி கடைகள், கோழி, ஆடு, மாடு, மீன் முத்லான பண்ணை அமைத்தல், தொழிற்சாலை அமைத்தல், முதலான அனைத்துத் தொழில்களுக்கும் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்.
செயல்முறை
- அருகில் உள்ல வங்கிக்குச் சென்று PMMY Application Form என்ற விண்ணப்பத்தினைப் பெற வேண்டும். அல்லது இணையத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் மூலம் மூன்று கடன் வசதிகள் இருக்கின்றன. அதாவது, சிசு, கிஷோர், தருண் என மூன்று வகை உள்ளன. அவற்றில் எது உங்கள் தொழிலுக்கானது என வங்கி முடிவு செய்யும்.
- 5 வருடம் வரை காலக்கெடு கிடைக்கும். அதுவரை இக்கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
- இந்த கடனுக்கு 12% வட்டி நிர்ணயிக்கப்படும்.
- இந்த கடனைப் பெற எந்த வித சொத்துப் பணயமோ, தனிநபர் ஜாமீனோ தேவையில்லை எனக் கூறப்படுகிறது.
தேவைப்படும் சான்றுகள்
- விண்ணப்பப் படிவம்
- புகைப்படம் இரண்டு
- இருப்பிடச் சான்று
- சாதிச் சான்று
- தொழில் இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்
- இயந்தைரங்கள் வாங்குவதற்கான ரசீது
மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
மேலும் படிக்க