கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு கபசுரக்குடிநீரை வழங்கும் திட்டத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
கொரோனா 2-வது அலை, இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும், லட்சக்கணக்கானோர் பாதிப்பு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு என மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
உயரும் உயிரிழப்பு (Rising casualties)
நோய் எதிர்ப்புச்சக்தி குறைதல், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டக் காரணங்களால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தொற்றுப்பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போதிலும், பரவல் கட்டுப்படவில்லை.
புதியத் திட்டம் (New project)
இந்நிலையில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப் படாத பெருவாரியான கொரோனா நோயாளிகளுக்காகப் புதியத் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
ஆயுஷ் 64 (AYUSH64)
இதன்படி பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பல தரப்பைச் சேர்ந்த மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
திட்டம் தொடக்கம் (Project Launch)
இந்தத் திட்டத்தை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சரும் ( தனிப்பொறுப்பு), மத்திய ஆயுஷ் அமைச்சருமான (கூடுதல் பொறுப்பு) கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம், வெளிப்படைத் தன்மை வாய்ந்த வகையிலும், தரமான முறையிலும் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்யும். இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏராளமான நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு கட்டங்களாக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. சேவாபாரதி, இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக செயல்படும்.
தொற்றுக்கு எதிரான போராட்டம் (The fight against infection)
கொரோனாப் பெருந்தொற்று தொடங்கியது முதல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் விநியோகிக்கும் இந்த முன்முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது.
சிறந்த பலன் கிடைத்துள்ளது (Got the best benefit)
அறிகுறியற்ற, லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், பொதுவான சிகிச்சையுடன் ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகிய வற்றையும் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை வழங்கியிருக்கிறது.
எனவே, வீட்டுத் தனிமையில் உள்ள நோயாளிகள், ஆயுஷ் சிகிச்சை முறைகளினால் பயனடைவதற்காக இந்த நாடு தழுவிய திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.
மேலும் படிக்க...
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!
கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!