Central

Friday, 30 October 2020 06:17 PM , by: Daisy Rose Mary

LIC காப்பீடு நிறுவனம், தனது பழைய பிரபலமான பென்சன் பாலிசி ஒன்றை புதுப்பித்துள்ளது. 30 வயது முதல் 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசி திட்டத்தில் இணையலாம். இந்த பாலிசியில், குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடு செய்தவுடனேயே, மாதந்தோறும் ரூ.24,000 பென்சன் கிடைக்கும்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC (life India corporation) மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்காலத் தேவைகாக்கவும் பல்வேறு அரிய நல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படுவதால், எல்.ஐ.சி-யில் பணத்தை முதலீடு செய்வதில் எந்த வித ஆபத்தும் இல்லை என மக்கள் நம்புகின்றனர்.

ஜீவன் அக்க்ஷய் (Jeevan Akshay)

அண்மையில், எல்.ஐ.சி., நிறுவனம் தனது பழைய பாலிசி ஒன்றை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஜீவன் அக்க்ஷய் (Jeevan Akshay) பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியின் சிறப்பு என்னவென்றல், இந்த பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனேயே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்சனை கேட்டுப் பெற முடியும். . லட்சக்கணக்கான மக்கள் எல்.ஐ.சி.,-யின் இந்த பாலிசியில் முதலீடு செய்து அதன் பலனை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களைக் காட்டிலும், இந்த பென்சன் தேவையாக உள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்‌ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாலிசிக்கான தகுதிகள்

  • ஜீவன் அக்‌ஷய் பாலிசி : 30 - 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம்.

  • மருத்துவ பரிசோதனைகளுக்கான அவசியம் ஏதும் இல்லை.

  • இந்திய குடிமக்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.

  • ரூ.1 லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டுடன் இந்த பாலிசியை எடுக்கலாம்.

  • பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகின்றன.

இந்த ஜீவன் அக்‌ஷய் பாலிசியில், முதலீடு செய்தவுடனேயே மாதந்தோறும் ரூ.24,000 பென்சனை நீங்கள் கேட்க முடியும். அதற்கு, Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

 

பாலிசி நடைமுறை (உதாரணம்)


37 வயதான ஒருவர் இந்த ஜீவன் அக்‌ஷய் பாலிசியை எடுக்கும்பட்சத்தில், அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பாருங்கள்.

  • வயது: 37

  • Sum Assured: ரூ. 50 லட்சம்

  • Lump Sum Premium: ரூ. 50 லட்சத்து 90 ஆயிரம்

  • பென்ஷன் திட்டம் ; ஜீவன் அக்‌ஷய் பாலிசி

  • வருடாந்திர பென்ஷன்: ரூ.3,02,750

  • அரையாண்டு பென்ஷன்: ரூ.1,48,875

  • காலாண்டு பென்ஷன்: ரூ.73,750

  • மாதாந்திர பென்ஷன்: ரூ.24,479

37 வயதான ஒரு நபர் ஆப்ஷன் ‘A’-வில்ரூ. 50 லட்சத்தை உறுதித் தொகையாக (Sum Assured) தேர்வு செய்யும் பட்சத்தில், அவர் ப்ரீமியம் தொகையாக ஒரே நேரத்தில் 50 லட்சத்து 90 ஆயிரத்தை கட்ட வேண்டியிருக்கும்.இதன் பிறகு அவருக்கு மாதந்தோறும் பென்சனாக ரூ.24,479 கிடைக்கும். பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை இந்த பென்சன் பணம் கிடைத்து வரும். அவருடைய மரணத்திற்குப் பின்னர் பென்சன் நிறுத்தப்படும்.


மேலும் படிக்க...

ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)