ஒரே ஒரு பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் அக்ஷய் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4,000 பென்சன் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
இளம் வயதில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம். ஆனால் முதுமையில் அனைவரும் ஒருவித தனிமையா அனுபவிக்கின்றனர். அந்த ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
ஜீவன் அக்ஷய் பாலிசி (Jeevan Akshay)
எல்.ஐ.சி யின் ஜீவன் அக்க்ஷய் (Jeevan Akshay) பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியின் சிறப்பு என்னவென்றல், இந்த பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனேயே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்சனை கேட்டுப் பெற முடியும்.
பாலிசிக்கான தகுதிகள்
-
ஜீவன் அக்ஷய் பாலிசி : 30 - 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம்.
-
மருத்துவ பரிசோதனைகளுக்கான அவசியம் ஏதும் இல்லை.
-
இந்திய குடிமக்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும்.
-
ரூ.1 லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டுடன் இந்த பாலிசியை எடுக்கலாம்.
-
பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகின்றன.
-
இந்த ஜீவன் அக்ஷய் பாலிசியில், முதலீடு செய்தவுடனேயே மாதந்தோறும் ரூ.4,000 பென்சனை நீங்கள் கேட்க முடியும். அதற்கு, Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
பாலிசி நடைமுறை
55 வயதான ஒருவர் இந்த ஜீவன் அக்ஷய் பாலிசியை எடுக்கும்பட்சத்தில், அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பாருங்கள்.
-
வயது: 55
-
Sum Assured: ரூ. 7 லட்சம்
-
செலுத்த வேண்டிய பீரிமியம் : ரூ. 7,12,600/-
-
பென்சன் திட்டம் : ஜீவன் அக்ஷய் பாலிசி
-
வருடாந்திர பென்சன்: ரூ.54,145/-
-
அரையாண்டு பென்சன்: ரூ.26,513/-
-
காலாண்டு பென்சன்: ரூ.13,107/-
-
மாதாந்திர பென்சன்: ரூ.4,337/-
55 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை எடுப்பதாக இருந்தால் அவர் உத்திரவாதப் பணமாக ரூ.7 லட்சம் முதலீடு செய்வதாக இருந்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ.7,12,600 செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ.4,337 என்ற அளவில் பென்சன் வந்துகொண்டிருக்கும்.
அதேபோல, மாதா மாதம் பென்சன் வாங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையே பென்சன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு ரூ.13,107, ஆறு மாதங்களுக்கு ரூ.26,513, ஒரு வருடத்துக்கு ரூ.54,145 என்ற அளவில் அவருக்குப் பென்சன் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை இந்த பென்சன் பணம் கிடைத்து வரும். அவருடைய மரணத்திற்குப் பின்னர் பென்சன் நிறுத்தப்படும்.
மேலும் படிக்க...
ஒரே ப்ரீமியத்தில் ஓஹோன்னு வாழ்க்கை : எல்.ஐ.சி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம்!
ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!