Central

Sunday, 03 January 2021 10:07 AM , by: Elavarse Sivakumar

Credit: Times of India

மனதில் நிம்மதியுடனும், கையில் நிதிப்பற்றாக்குறையும் இல்லாமல் வாழ வேண்டிய காலம் என்றால், அது நம்முடைய ஓய்வு காலம்தான்.

அவ்வாறு நிம்மதியுடன் கழிக்க வேண்டுமானால், சிறுவயதில், கடினமாக உழைப்பதுடன், ஓய்வுகாலத்திற்காக சிறுக சிறுக சேமிக்க வேண்டும். அப்படியொரு ஓய்வூதியத் திட்டம் (Pension Scheme)தான் அடல் பென்சன் யோஜனா (Atal Pension Yojana Scheme)

அடல் பென்சன் யோஜனா திட்டம் (Atal Pension Yojana Scheme)

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. உண்மையில் தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும். இத்துடன், குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

தகுதி (Qualification)

உங்களது ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெற வேண்டுமானால், நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்து பயனடைய முடியும்.

வரிச்சலுகை (Tax concession)

ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.

கணக்கு துவங்குதல் (Account Opening)

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் தரும் என்பது சிறப்பு அம்சமாகும்.

42 ரூபாய் போதும்(Rs.42 is enough)

  • இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 5,000 ரூபாயும் ஓய்வூதியம் கிடைக்கும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வாங்க வேண்டுமானால் நீங்கள் 42 ரூபாய் மாதாந்திர பிரீமியம் செலுத்தினால் போதும்.

  • 18 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் இந்த ஓய்வூதியம் தொகையை நீங்கள் பெற முடியும். ஒருவேளை 40 வயதில் நீங்கள் இத்திட்டத்தில் இணைந்தால் உங்களது பங்களிப்புத் தொகை ரூ.291 ஆக இருக்க வேண்டும்.

  • ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமென்றால் உங்களது 18ஆவது வயதில் கணக்குத் தொடங்கி மாதம் ரூ.210 சேமிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

இந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி பரிசு! நம்ப முடிகிறதா?

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)