Monthly Rs. 5,000 enough to get 1 lakh pension!
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தேசிய சேமிப்புத் திட்டத்தினைக் குறித்து இப்பதிவு அமைகிறது. தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்தினைக் குறித்த முழு விவரங்களை இப்பதிவு விளக்குகிறது
தற்காலத்தில், இளம் வயதில் ஓடி ஓடி உழைத்து வயதாகிற பிற்காலத்தில் சேமிப்பு இல்லாமல் தவிக்கின்ற நிலையினை நாம் ஆங்காங்கு பார்க்கத்தான் செய்கிறோம். அவ்வாறு நீங்களும் வயதான காலத்தில் எந்தவித பணப்பற்றாக் குறையும் இன்றி வாழ வேண்டுமா? அவ்வாறு வாழ வேண்டுமெனில் இன்றே தேசிய பென்சன் திட்டத்தில் இணையுங்கள்.
தேசிய சேமிப்புத் திட்டம்
தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றாகும். இது முதலீட்டுத் திட்டமாகும். அதோடு, இந்த திட்டம் முதன் முதலில் 2004-ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு என்று மட்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பிறகாலத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அனைத்து மக்களுக்குமானதாக இத்திட்டம் மாற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
யாரெல்லாம் பயன்பெறலாம்? (Who can benefit?)
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
18 முதல் 65 வயது வரை உள்ள நபராக இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள் (Highlights)
தேசிய பென்சன் திட்டத்தில் 8 முத்ல 10 சதவீத வட்டி லாபமாகக் கிடைக்கிறது.
வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.
இது இரண்டு முறைகளில் காணப்படுகின்றது. அதாவது டயர் 01, டயர் 02 என இரண்டு பிரிவுகளில் மக்கள் பணத்தைச் செலுத்திக் கணக்கைத் தொடங்கலாம். டயர் 01 எனும் முதல் பிரிவில் குறைந்தது ரூ. 500 எனும் தொகையையும், டயர் 02 எனும் இரண்டாம் பிரிவில் குறைந்தது ரூ. 1000 எனும் தொகையும் செலுத்திக் கணக்குத் தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் 25 வயது இருக்கும் போது மாதம் 5000 எனும் தொகையைக் கட்டி சேர்ந்து தொடர்ந்து பணத்தைச் சேமித்து வந்தால் உங்களின் கடைசி காலக்கட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பென்சன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இணையுங்கள். பணத்தை வீணாகச் செலவழிக்காமல் சேமித்து உங்களின் கடைசி காலங்களில் மிகுந்த பயனுள்ளதாக மாற்றுங்கள்.
மேலும் படிக்க