எதிர்பாராத வேளையில் நம்மைத் தாக்கித் துவட்டி எடுக்கும் நோய் மற்றும் விபத்து காலங்களில் நமக்கு கைகொடுத்து உதவுவது இன்சூரன்ஸ் பாலிசி.
அதிலும் தரமான சிகிச்சை பெறமுடியாமல், ஏழைகள் தங்கள் இன்னுயிரை இழக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமே ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் (Ayushman Bharat Yojana )
மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறந்த மற்றும் விலைஉயர்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் உன்னத நோக்கம். ஆனால் இந்த திட்டம், யாரும் எதிர்பார்த்திராத பலன்களை அள்ளித் தந்தது கொரோனா நெருக்கடி காலத்தில். இந்தத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழை எளியோர் பயனடைந்தனர்.
அளிக்கப்படும் சிகிச்சைகள்
-
மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை
-
முதியோருக்கு அவசரகால சிகிச்சை
-
மகப்பேறு காலத்தில் அத்தனை சிகிச்சைகளும் அடங்கும்.
-
பல் சிகிச்சை
-
குழந்தைகளுக்கான சிகிச்சைகள்
-
குறிப்பாக முதியோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்நலத்தில் சிறப்பு கவனம்
-
மகப்பேறு காலத்தில் ரூ.9ஆயிரம் வரை
இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், டிஸ்சார்ஜ் வரை ஆகும் அத்தனை சிகிச்சைகளுக்கான தொகையையும், மத்திய அரசே செலுத்தும்.
தகுதி (Qualify)
-
குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
-
குடும்பத்தலைவர் பெண்ணாக இருக்க வேண்டியது அவசியம்.
-
குடும்பத்தில் யாராவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டியது கட்டாயம்.
-
கூலித்தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
-
மாத வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
-
சொந்தமாக நிலம் இருக்கக்கூடாது
-
இணைவது எப்படி? (How to join)
இணைய விரும்புபவர்கள் https://pmjay.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று Am I Eligible என்ற Optionயைக் click செய்ய வேண்டும். அங்கு உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து Generate OTP buttonனை Click செய்யவும். அப்போது உங்கள் செல்போனில் வரும் OTP யைப் பதிவு செய்யவும். பின்னர் உங்களது ரேஷன் அட்டை எண், பயனாளியின் பெயர் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்யவும். நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் உங்கள் பெயர் பயனாளி லிஸ்ட்டில் (List) சேர்ந்துவிடும்.
மேலும் படிக்க...
50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை