மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2020 6:33 AM IST
Image credit by: Dreamstime

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செலுத்த திட்டமிட்டுள்ளது. விவசாயப் பயனாளியான உங்களுக்கு பணம் வரவில்லை என்றால், ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

PM-Kisan திட்டம்


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.

அடுத்த தவணை எப்போது?

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இந்த ஆண்டுக்கான முதல் தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற முடியாத விவசாயிகள் 011-24300606 என்ற இலவச எண்ணுக்கு அழைப்பு விடுத்து தங்களது வங்கி கணக்கு வரவு விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவணை கிடைக்கவில்லையா?

நிதி உதவு பெற தகுதி பெற்றிருந்தும் உங்களுக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் பலனைப் பெறமுடியவில்லை என்றால், நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம், ஆதார் அட்டையில் உங்கள் பெயர் வங்கிக் கணக்கில் இருந்ததைவிட வித்தியாசமாக இருக்கலாம்.

இதனை நீங்கள் pmkisan.gov.in வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரி செய்துக்கொள்ள முடியும், உங்கள் பெயர் தவறாக இருந்தால் மட்டுமே அதை ஆன்லைனில் சரிசெய்ய முடியும். வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் வேளாண்மைத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.

PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

9.59 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி

இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 9.59 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறத் தகுதியுள்ள விவசாயிகள் இன்னும் 5 கோடி பேர் இணையாமல் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் இணைந்து பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: PM Kisan Samman Nidhi Yojana: Find a Easiest Way to Know About your status and Will you Next Installment
Published on: 17 June 2020, 03:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now