பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 July, 2020 10:42 PM IST

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை மத்திய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது, இதன் மூலம் அரசு வெளியிட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பின் வரும் விவரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்லலாம். 


PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-Kisan)அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 14 கோடி விவசாயிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி

நாடுமுழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முற்றிலும் முடங்கியுள்ள பொருளாதார மந்தநிலையைச் சீராக்க கொரோனா சிறப்பு நிதித் தொகுப்பாக 20 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அன்மையில் ஒதுக்கியது. இதில் வேளாண் துறைக்கு மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கிசான் கிரெடிட் கார்டு (KCC)

இந்த வேளாண் நிதியை அதிக விவசாயிகள் பெற்றுப் பயனடையும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் திட்டத்தீன் கீழ் 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கப்படவுள்ளது. இந்த அட்டையை பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதனால் புதிதாக பலர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 

நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்... உங்களுக்கான வழிமுறைகள்!

உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி?

இந்நிலையில், இந்த திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகளின் முழுமையான பட்டியலை மத்திய அரசு pmkisan.gov.in இல் பதிவேற்றியுள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

  • நீங்கள் சரிபார்க்க வேண்டுமெனில், pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

  • வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் Farmers Corner என்பதை கிளிக் செய்யுங்கள்

  • அங்கு கிடைக்கும் தொகுப்புகளில் Beneficiary List என்பதை தேர்வு செய்யுங்கள்.

  • பின் அதில் உங்கள் மாநிலம் , மாவட்டம், போன்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்

  • அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட பிறகு Get Report என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • அதில் உங்கள் பகுதியில் PM-Kisanல் இணைந்திருப்பவர்களின் முழு பட்டியலையும் காண முடியும்

  • https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx - நேரடியாக பட்டியலை பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள்

விடுபட்டவர்களின் கவனத்திற்கு

முழுமையற்ற விண்ணப்பம் அல்லது தவறான ஆதார் விவரங்கள் காரணமாக சில விவசாயிகளின் பெயர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் Farmers Cornernல் புதுப்பிப்பு /மாற்றங்களை செய்து கொள்ளளாம்

மேலும் படிக்க... 

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

English Summary: PM Kisan Samman Nidhi Yojana Here is the Detail Process on How to check Your Status
Published on: 12 June 2020, 03:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now