1. தோட்டக்கலை

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit By : MushComb

பொதுவாக காளான்களில் அதிக ஈரப்பதம் இருப்பதால் அறுவடை செய்த 24 - 48 மணி நேரத்திற்கு மேல் சாதாரண வெப்ப நிலையில் நல்ல முறையில் வைத்திருக்க இயலாது. இன்றைய வியாபார சூழ்நிலைகளில் சில சமயங்களில் சந்தையில் காளான் விற்பனை சில எதிர்பாராத சூழ்நிலைகளினால் மந்தமாக இருந்தால் நாம் காளானைபதப்படுத்தி சந்தை விற்பனைக்கு தகுந்தவாறு விற்பனை செய்யலாம்.

காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.

இப்பூஞ்சான உணவுக் காளான்களில் உள்ள ஈரப்பதம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களை போன்று எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது. ஆதலால் அதை பதப்படுத்தி பாதுகாத்தல் அவசியமாகும். காளான்களை அறுவடைக்குப் பின் அவற்றின் தேவைக்கு ஏற்பட சேமித்து வைக்கும் முறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால சேமிப்பு, மற்றொன்று நீண்ட கால சேமிப்பு.

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!

Credit By : Pasa Farming

குறுகிய கால இருப்பு வைக்கும் முறை

  • காளான்களை துளையிடாப் பாலித்தீன் பைகளில் 5 டிகிரி வெப்ப நிலையில் குளிர்சாதனப் பெட்டிகளில் இரண்டு நாட்களுக்கு பாதுகாக்கலாம்.

  • காளானை பறித்தவுடன் 0.1 சதம் சிட்ரிக் அமிலம் அல்லது 0.5 சதம் பொட்டாசியம் மெட்டாபைசல்பேட் கலந்த கரைசலில் சலந்த கரைசலில் நனைத்து ஈரம் உலர்ந்தவுடன் நிறம் மாறாமல் மூன்று நாட்களுக்கு பாதுகாக்கலாம்.

  • வெந்நீரில் (80 டிகிரி செல்சியஸ்) 2 நிமிடம் வைத்து எடுத்து காளானை 0.5 சதம் சிட்ரிக் அமில கரைசலில் 8-10 நாட்கள் வரை இருப்பு வைக்கலாம்.

நீண்ட காலச் சேமிப்பு

காளான்களை சூரிய வெப்பத்தில் உலர்த்துதல் மற்றும் உப்பு கரைசலில் பதப்படுத்தி சேமித்தல், கேனிங் மற்றும் பிளான்சிங் போன்ற முறைகளில் பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்கலாம்.

சூரிய ஒளியில் உலர்த்தல்

காளான்களை சுத்தம் செய்த பின் தினசரி செய்தித் தாள் பரப்பிய இரும்பு தட்டுகளில் வைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தொடர்ந்து வெயிலில் உலர்த்தி, பின்பு துளையிடாத பாலிதீன் பைகளில் அடைத்து பாதகாக்கலாம். இம்மாதிரி பதப்படுத்தப்பட்ட காளன்களில் சத்துக்கள் குறைவதில்லை, மேலும் உபயோகப்படுத்துதம் சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்தால் புதிதாக மலர்ந்த காளானை போல் ஆகிவிடும்.

இயந்திர உலா்த்தி

இயந்திர உலர்த்தி மூலம் 45-50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மூன்று நாட்களுக்கு உலர்த்தப்பட்ட காளான்களை துளையிடாத பாலிதீன் பைகளில் மூன்று மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம். தேவைபடும் சமயத்தில் மேற்கூறியது போல் வெந்நீரில் நனைத்து உபயோகப்படுத்தலாம்.

மிதவை படுக்கை உலர்த்தி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மிதவை படுக்கை உலர்த்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தில் வெப்பக் காற்று ஒரே சீராக காளான்களின் மேல் பரவுவதால் காளான்கள் ஒரே மாதிரியாக உலர்த்தப்படுகிறது. இக்கருவியில் 6 கிலோ எடையுள்ள புதிய காளான்களை 80 நிமிடத்தில் ஏறத்தாழ 0.6 கிலோ எடையுள்ள உலர்ந்த காளானாக மாற்றலாம். இந்த காளான்களை துளையிடாத பாலிதீன் பை அல்லது காற்றுபுகா டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் பொழுது உபயோகிக்கலாம்.

Credit By : Rural Delivery

உப்பு கரைசலில் சேமித்தல்

அறுவடை செய்த காளான்களை 3-5 நிமிடங்களுக்கு கொதித்த நீரில் அமிழ்தத வேண்டும். உப்பு கரைசலில் (ஒரு கிலோ உப்பை ஒரு லிட்டர் தண்ணீர்) காளான் அமிழ்ந்திருக்கும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு 2 நாட்கள் கழித்து உப்புக்கரைசலில் 800 மில்லி கிராம் சிட்ரிக் அமிலம் கலக்க வேண்டும். இதில் காளான்களை 8 மணி நேரம் அமிழ்ந்திருக்கமாறு வைக்கவும். பின் இளஞ்சூடான நீரில் நன்கு கழுவியபின் சமைக்க பயன்படுத்தலாம்.

கேனிங் (Canning) முறையில் டப்பாக்களில் பதப்படுத்துதல்

இம்முறையில் பால்காளான்களை பதப்படுத்தலாம். காளான்களை வெட்டி 0.1 சதம் சிட்ரிக் அமிலத்தில் கழுவ வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சிட்ரிக் அமிலம்) ஐந்து நிமிடத்திற்குப் பின் டப்பாக்களில் அடைத்து அதில் உப்புக் கரைசலை ஊற்ற வேண்டும். பின் டப்பாவை கொதிக்கும் நீரில் வைத்து உரிய சாதனங்களைக் கொண்டு கெட்டியாக அடைக்க ணே்டுமு். இவ்வாறு தயார் செய்த டப்பாக்களை வெப்பமூட்டியில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும் (ஒரு சதுர சென்டிமீட்டருக்கு ஒரு கிலோ கிராம் என்ற அழுத்தத்தில் 110 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொற்று நீக்கம் செய்த டப்பாக்களை உடனடியாக நீரோட்டம் உள்ள தொட்டிகளில் குளிர வைத்து விற்பனை செய்யலாம்.

காளான் ஊறுகாய்

காளானை ஊறுகாய் செய்து பாதுகாப்பது மூலம் நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இதற்குக் காளான்களை சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் சுத்தமான மெல்லிய துணியால் மென்மையாக துடைத்து எடுக்கலாம். முந்திரி, ஜாதிப்பத்திரி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை வானலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு நல்லெண்ணெயைக் காய வைத்து அதில் காளான் துண்டுகளை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வறுத்து பொடி செய்ததை காளானில் ருசிக்கேற்ப உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலக்கி இறக்கி, சூடு ஆறிய பின் சுத்தமான ஈரமற்ற பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும். தற்போது பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் காளான் உற்பத்தி 7 மடங்காக பெருகியுள்ளது.

காளான் விற்பனை

1 கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் 30 ரூபாய் தேவைப்படும்.
1 கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யலாம். நேரடியாக நாமே விற்பனை செய்ய ஆகும் செலவு ரூ.120 முதல் ரூ.150 வரை ஆகும்,

காளான்களில் ஏற்றுமதி பெரிதாக இல்லை. ஏனெனில் உள்நாட்டு தேவையே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 75-100 டன் அளவிற்கு காளான் தேவை உள்ளது. ஆனால், உற்பத்தி 15-20 டன் அளவிற்கு மட்டுமே உள்ளது. இருப்பினும் மொட்டு காளான் எனும் ஒரு வகை காளான் குறிப்பிட்ட அளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மொட்டு காளான் உற்பத்தியில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்திலும், வைக்கோல் காளான் உற்பத்தியில் ஒடிசா மாநிலம் முதலிடத்திலும், பால் மற்றும் சிப்பி காளான் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும் உள்ளது. எனவே, காளான் தேவை அதிகம் இருப்பதால் உற்பத்தில் பலர் ஈடுபட நேர்ந்தால் லாபம் பெருவதோடு நம் நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க...

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!

சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்

முறையான பயிர்வாரி சாகுபடி முறைகள் & தொழிநுட்பங்கள் - பகுதி-1!

English Summary: here some Useful Methods of processing and selling mushrooms! Published on: 06 July 2020, 05:03 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.