பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், பதிவு செய்யப்பட்ட உங்களது விவரங்களில் ஏதேனும் திருத்தம்/ மாற்றம் இருப்பின் அதனை இணையப்பக்கத்தில் மேற்கொள்வது எப்படி என்கிற தகவலை இப்பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், நீங்கள் PM கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளியாக இருப்பின், நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் விவரங்களை ஆன்லைனில் திருத்த வேண்டும் என்றால், கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
- பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் - pmkisan.gov.in.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘ஃபார்மர்ஸ் கார்னர்’டேப்பில், ‘ஆதார் தோல்விப் பதிவுகளைத் திருத்து’(Edit Aadhaar Failure Records) என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, 'டேட்டாவைப் பெறு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- திரையில் காட்டப்படும் விவரங்களைச் சரிபார்த்து, ஏதேனும் தவறான தகவல் இருப்பின் அதனை திருத்தவும்.
- மேற்கண்டவாறு தேவையான மாற்றங்களைச் செய்தவுடன், 'சேமி' (save) என்கிற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் திருத்தப்பட்ட விவரங்களை வெற்றிகரமாகச் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தும் செய்தி திரையில் காட்டப்படும். உங்கள் விவரங்களில் செய்யப்படும் எந்த மாற்றங்களும் சரிபார்ப்புக்கு உட்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் PM Kisan Samman Nidhi பக்கத்தில் பிரதிபலிக்கும்.
அரசு திட்டத்தின் பலன்களை நீங்கள் பெறுவதை உறுதி செய்ய, உங்கள் விவரங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதும் முக்கியம். ஆன்லைனில் உங்கள் PM Kisan Samman Nidhi விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம், வங்கிக் கணக்கு விவரங்களைத் திருத்தலாம் மற்றும் அதே இணையதளத்தில் உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட தொகை குறித்த தகவல்களை காணலாம்.
PM Kisan Samman Nidhi இணைய பக்கத்தில் உங்களது தவறான விவரங்களைத் திருத்துவது ஒரு எளிய செயல்முறையாகும், மேற்குறிப்பிட்ட சில எளிய முறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு காலாண்டிலும் அரசு திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெறுவதை உறுதிசெய்ய, உங்களது விவரங்களை எப்போது புதுப்பித்து வைத்திருப்பது முக்கியம்.
மேலும் காண்க:
டிஜிட்டல் இந்தியா மசோதா 2023-ன் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றிய இணை அமைச்சர் விளக்கம்
வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்