1. செய்திகள்

வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Special medical camp in Karur district to control the spread of influenza viral fever

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் குறைந்தது 24 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமீபத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத்துறையின் மூலம் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலின் படியும், ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 நடமாடும் மருத்துவக் குழுக்களை கொண்டு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று (10.03.2023) முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் விவரம் பின்வருமாறு-

கரூர் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களாக இருப்பின் 3 மருத்துவ முகாம்களும், பள்ளிகளாக இருப்பின் 3 முதல் 5 சிறப்பு முகாம்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் குறைந்தது 24 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. இது ஒருவகையான இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் ஆகும். இதன் அறிகுறி இருமல், சளி, லேசான காய்ச்சல், உடல் சோர்வு போன்றவையாக இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் முகாமில் தேவையான சிகிச்சை பெற்றுக் கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடையலாம்.

முகாமிற்கு வரும் காய்ச்சல் கண்ட நபர்களின் காய்ச்சல் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளித்து, தேவைப்படின் தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில், காய்ச்சல் தடுப்புப் பணிகளான குடிநீர் சுத்தம் செய்தல், நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரினேசன் செய்தல் மற்றும் கொசுப் புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணி, அப்பகுதி முழுவதும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்.

எனவே, கரூரில் உள்ள காய்ச்சல் கண்ட நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும், தங்கள் வீட்டில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காய்ச்சல் கண்டிருப்பின், வீட்டிலேயே சுயமருத்துவம் பார்க்காமல் இந்த முகாமிற்கு அழைத்து வந்து சிகிச்சை பெறவும்.

காய்ச்சல் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப., சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?

கொப்பரை கொள்முதல் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும்- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

English Summary: Special medical camp in Karur district to control the spread of influenza viral fever Published on: 11 March 2023, 11:48 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.