மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2020 6:33 AM IST
Credit by : Dinamani

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 4000 ரூபாய், அதவாது 2 தவணைகளை நீங்கள் பெற முடியும்

PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. மூன்று தவணையாக தலா ரூ. 2000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இதற்கான முதல் தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையும். இரண்டாவது தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை வருகிற ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படவுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிரதமர் கிசான் திட்ட விதிகளின் படி, நீங்கள் ஜூன் மாதத்தில் விண்ணப்பித்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இரண்டு தவணைகளை நீங்கள் பெற முடியும். அதவாது, ஏப்ரல் மாதத்திற்கான தவணை ஜூலை மாதத்தில் பெறப்படும், ஆகஸ்ட் மாதத்தின் புதிய தவணையும் உங்கள் கணக்கில் வரும்.

இது வரை நீங்கள் இந்த திட்டத்தில் இணையவில்லை எற்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இந்த திட்டத்தில் இணைந்து உடனே உங்களுக்கான பலனை பெற்றுக்கொள்ளுங்கள்

பிரதமர்-கிசான் பயனாளிகள் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறார்கள்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றப்பட்ட பின்னர் பயனாளிகளை அடையாளம் காணவும், அவர்களின் கணக்கிற்கு பணம் அனுப்பவும் "நில உரிமையாளர் முறையை" நடைமுறையை பயன்படுத்துமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் விவரங்களை பிரதமர்-கிசான் போர்ட்டலில் பதிவேற்றுவது முழுவதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவுடன், மாநில / யூனியன் பிரதேசத்தின் அரசாங்கங்களுக்கு இது குறித்து விசாரிக்க உரிமை உண்டு. எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும்.

Credit by : Asianet tamil

PM-Kisan திட்டத்தின் கீழ் சேர தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள்

  • பெயர் (Name)மற்றும் வயது (Age)

  • பாலினம் (Gender)மற்றும் வகை(எஸ்சி / எஸ்டி) (Catefory -SC/ST)

  • வங்கி கணக்கு எண் (Bank Account Number) மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு (IFSC Code)

  • கைபேசி எண் (Mobile number)

  • செல்லுபடியாகும் ஆதார் எண் (Valid Aadhaar number)

PM-Kisan விண்ணப்ப நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - pmkisan.gov.in

  • முகப்புப்பக்கத்தில் 'Farmers Corner' என்பதைக் கிளிக் செய்க.

  • இப்போது ''beneficiary status' என்பதைக் கிளிக் செய்க.

  • தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

  • நேரடியாக உங்களின் நிலை குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும். 

PM-Kisan புதிய பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று Farmers Corner-ல், beneficiary list என்பதை கிளிக் செய்க. தேவையான விவரங்களை நிரப்பவும், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்.
PM-Kisan பட்டியலை சரிபார்க்க கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கும், எந்தவொரு சந்தேகங்களுக்கு எங்கள் ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

  • ஹெல்ப்லைன் - 155261
  • கட்டணமில்லாது - 1800115526
  • லேன்ட் லைன் நம்பர் - 011-23381092, 23382401

மேலும் படிக்க...

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்

English Summary: PM Kisan scheme money coming soon, done your registration before June 30
Published on: 26 June 2020, 04:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now