மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 December, 2020 11:56 AM IST
Credit : Clear Tax

வருங்காலத்திற்கான சேமிப்புதான் நம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றும். அதனால்தான் சேமிப்பு (Savings) என்பது சம்பளத்தின் முதல் செலவாக இருக்கட்டும் என்று கூறுவார்கள்.

அந்த வகையில் சிறுசேமிப்பை வழக்கமான செலவாக மாற்றிக்கொள்ளும் எண்ணம் உடையவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் செய்தி உங்களுக்குதான்.
பல சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சேமிப்பு என்றால் அது எப்போதுமே அஞ்சலக சேமிப்புதான்.

மத்திய அரசினுடையது என்பதால், கிராமமக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்தான்(Postal Saving Schemes). அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சிலவற்றைப் பார்ப்போம்.

அஞ்சலக சேமிப்பு திட்டம் (postal saving scheme)

அஞ்சலகங்களிலும் வங்கிகளில் உள்ளதை போலவே சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கணக்குகளில் செக் (Cheque) மற்றும் செக் அல்லாத வசதிகளும் உண்டு செக் வசதி தேவையில்லை எனில் உங்களது சேமிப்பு கணக்கில் 50 ரூபாய் இருந்தால் கூட போதும், இதே செக் வசதி வேண்டும் என்றால், 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவைப்படும்.

நாமினேஷன் (Nomination) வசதியுடன் ஒரு நபர் ஒரு கிளையில் ஒரு கணக்கினை (Account) மட்டுமே தொடங்க முடியும். ஒரு சேமிப்பு கணக்கினை ஆக்டிவ்வாக வைத்திருக்க ஒரு கணக்கில் வைப்பு தொகை அல்லது பணத்தினை திரும்ப பெறுதல் வேண்டும். இந்த சேமிப்பு கணக்கில் 80TTA கீழ் வரி சலுகை உண்டு.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (Post office time Deposit)

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு.

அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகை அளிக்கப்படுகிறது.

Credit : Grow Wealth

போஸ்ட் ஆபிஸ் - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Saving Scheme)

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டம்தான்  மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமும் (SCSS ). இந்த சேமிப்புத் திட்டத்தில் ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வழிவகை உண்டு.

குறைந்தபட்சம் 1000 ரூபாயும்,  அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலுடு செய்யலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இதற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

 இது முதுமை காலத்திற்கு ஏற்ற ஒரு சரியான முதலீட்டு திட்டமாகும். இந்தியரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர்.
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல்  அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் பணம் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம்.  இந்த பிபிஎஃப் (PPF) திட்டத்தில் 80சியின் கீழ் வரிச்சலுகை உண்டு. 

சுகன்யா சமிரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.  ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை பெற்றோர் தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். அரசின் பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். ஒரு பெற்றோர் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கணக்குகளை துவங்கிக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க...

இந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி பரிசு! நம்ப முடிகிறதா?

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

English Summary: Postal savings schemes that are the star of hope of the rural people!
Published on: 26 December 2020, 11:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now