விவசாயிகள் மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ( களை எடுக்கும் கருவி ) வாங்குவதற்கு உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டம் 2023 -24ன் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பவர் டில்லர் ( 74 எண்கள் ) மற்றும் பவர் வீடர் ( 8 எண்கள் களைஎடுக்கும் கருவி ) மானியத்தில் வழங்க ரூ.67.10/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெறும் சிறு, குறு, பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளாகவும் இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
எனவே, தேர்வு செய்யப்பட்ட கலைஞர் திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு,
தேவையான ஆவணங்கள்:
- நிலத்தின் பட்டா,
- அடங்கல்,
- சிறு, குறு விவசாயி சான்று,
- சாதி சான்றிதழ்,
- ஆதார் அட்டை,
- புகைப்படம்,
- வங்கி புத்தக நகல்,
ஆகியவற்றுடன் உழவன் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற பிரிவின் கீழ் பதிவு செய்து பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1000 மாணக்களுக்கு இலவச UPSC பிரிலிம்ஸ் தேர்வு பயிற்சி