மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அந்த உணவுக்காக தன் உணவையும் கருதாமல் வெயில், மழை என எதையும் பாராமல் கடுமையாக உழைப்பவர்தான் விவசாயி.
மனிதகுலத்திற்காக அல்லும் பகலும் உழைக்கும் விவசாயிகளும் தங்களது வயதான காலத்தில் ஓய்வூதியம் பெற்றுப் பயனடைய வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா (Pradhan mantri kisan mandhan yojana) என்ற மகத்தானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தை தமிழக விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியை, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகளின் இந்த திட்டத்தில் இதுவரை பல லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர்.
தகுதி மற்றும் பலன்கள்
-
18 முதல் 40 வயதுக்குள் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும்.
-
அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயிகள், தங்கள் வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ப்ரிமியமாக ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். வயதிற்கேற்ப ப்ரிமியம் தொகை மாறுபடும்.
-
தொடக்கத்தில் கட்டும் அதே தொகையை தங்கள் 60 வயது வரைத் தொடரலாம்.
-
விவசாயிகள் செலுத்துவதற்கு நிகரான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும்.
-
1 மாதம், 5 மாதம், 6 மாதம், 1 வருடம் என அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து Auto debit மூலம் செலுத்தலாம்.
-
61 வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும்.
-
எதிர்பாராதவிதமாக பணம் கட்டியவர் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
-
விவசாயிகள் 5 வருடங்களுக்கு பிறகு, இந்த திட்டத்தைத் தொட விரும்பாத பட்சத்தில், செலுத்திய பணத்தை வட்டியுடன் பெறும் வசதியும் உள்ளது.
-
சிறு, குறு, விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதைக் கடந்துவிட்டது என்றாலும், தனது மனைவி, மகள், மகன் என அவர்களது பெயரிலும் இந்த திட்டத்தில் சேரலாம்.
-
EPO, NPS, அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.
-
திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள இ-பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
-
இந்த திட்டத்தில் இணைந்த விவசாயி ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்து விட்டார் எனில் அவருடைய மனைவி திட்டத்தை தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் சிறிது வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கோ போய் சேரும்.
-
கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.
-
ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
-
செலுத்தும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியில் நிறுத்தி விட்டாலும், வட்டியுடன் திரும்ப பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
ஆதார் அட்டை, (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்)
-
வாரிசுதாரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்)
-
வங்கிக் கணக்கு புத்தகம் (IFSC Code உள்ள ஏதேனும் வங்கி கணக்குப் புத்தகம்)
ஆகியவற்றை கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
தொகையை மாத தவணை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு முறை செலுத்தலாம்.
அரசின் இந்த திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் இணைந்து 60 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.
மேலும் படிக்க...
ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் - மானாவாரி விவசாயிகளுக்கு அழைப்பு!
ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!