Krishi Jagran Tamil
Menu Close Menu

10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

Sunday, 02 August 2020 05:52 PM , by: Daisy Rose Mary
10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உறுவாக்க திட்டம்

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல் மையங்களில் மூன்று நாள் மண்டல அளவிலான பயிற்சி பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உறையாற்றிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நிலையிலும், நல்ல அறுவடையும் (Good Harvest) குறுவைப் பயிர் விதைப்பு (Kharif crops sowing) நடவடிக்கைகளும் நடந்திருப்பதற்கு திருப்தி தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு நெருக்கடியிலிருந்தும் நாட்டை மீட்பதற்கான இயல்பான திறன்களை வேளாண்மை மற்றும் கிராமப்புறத் துறைகள் கொண்டுள்ளன என்று கூறினார். எதிர்காலத்தில் கிராமப்புற இந்தியாவும், விவசாய சமூகமும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியாவின் இலக்கை அடைவதில் முக்கியமான பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் மோடியின் உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு ஆதரவு என்ற முழக்கமும் கிராமப்புற வளர்ச்சியுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

கரிம மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. தோமர், இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான சூழலுக்கும் இன்றியமையாதவை என்றும், ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் விவசாயத்தை லாபகரமாக்கும் என்றும் கூறினார். மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வது விஞ்ஞானிகள் முன் முக்கியமான சவால்கள் என்றார்.

விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தனியார் முதலீட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு லட்சம் கோடி ரூபாயை வேளாண் உள்கட்டமைப்பு நிதியாக அரசு அறிவித்திருப்பது தன்னம்பிக்கை இந்தியாவின் இலக்கை அடைய உதவும். 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை (Farmer Producer Organizations) உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை விதைப்பு முதல் பயிர்கள் விற்பனை வரை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் சிறு விவசாயிகளை அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.


மேலும் படிக்க ....

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

முள்ளங்கிக்கு விலை கிடைக்கவில்லை- சாலையில் கொட்டப்படும் அவலம்!

வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!

 

FPO Farmers producers organisation கொத்தவரை விவசாயம் இயற்கை வேளாண்மை வேளாண் செய்திகள் விவசாய செய்திகள்
English Summary: Central Government Plan to create 10000 Farmers Producer Organizations

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. புதன் கிழமை காலை உருவாகிறது புரெவி புயல்- 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்!
  2. மக்காச்சோளப் பயிர்களில் சேதத்தை ஏற்படுத்திய காட்டுப்பன்றிகள்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
  3. நிவர் புயலால் அழுகிய சின்ன வெங்காயத்திற்கு இழப்பீடு வழங்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை!
  4. புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!
  5. 10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
  6. நிவர் புயலால் பூக்கள் வரத்து குறைவு! விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆண் குழந்தையுடன் அப்பாக்களுக்கும் லாபம் அள்ளித் தரும் "பொன்மகன் சேமிப்புத் திட்டம்"!!
  8. நிவர் புயல் தாக்குதலால் நீரில் முழ்கிய 9,400 ஹெக்டேர் பயிர்கள் - மீட்கும் முயற்சியில் அதிகாரிகள்!!
  9. நாளை வங்கக்கடலில் உருவாகிறது புயல் - தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!
  10. ”தமிழக மீன்’’ அங்கீகாரம் பெறும் "அயிரை மீன்” !!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.