Central

Friday, 30 October 2020 07:56 PM , by: Daisy Rose Mary

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனை விவசாயிகள் எளிய முறையில் அறிந்துகொள்ளப் பல மொபைல் ஆப்-களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு பயனுள்ள மொபைல் ஆப்-தான் பி.எம் கிசான் மொபைல் ஆப் (PM-Kisan Mobile app) இந்த செயலி மூலம் PM-Kisan அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் அனைத்து அம்சங்களும் வசதிகளும் இதில் பெறலாம்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana)
திட்டமான மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 கிடைக்க வழிவகை செய்கிறது. இவை மூன்று தவணையாக தலா ரூ. 2000 வீதம் விவசாய பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த பயனை விவசாயிகள் பெற பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுவது அவசியமாகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் எளிய முறையில் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஏதுவாக PM Kisan Mobile App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்

  • புதிய விவசாயிகள் பதிவு செய்தல் (New farmer registration)

  • பயனாளி நிலைமை (Beneficiary Status)

  • ஆதார் விவரங்களைத் திருத்துதல் (Edit Aadhaar details)

  • சுய பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் நிலைமை (Status of self registered farmers)

  • பிரதமர் கிசான் ஹெல்ப்லைன் (PM Kisan helpline)

PM Kisan Mobile App-ஐ டவுன்லோட் செய்வது எப்படி?

PM கிசான் மொபைல் ஆப்-பை கீழே வழங்கப்பட்டுள்ள படிகளின் மூலம் டவுன்லோட் செய்யலாம்

  • உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் (Play store) பயன்பாட்டிற்குச் செல்லவும்.

  •  அதன் பிறகு நீங்கள் PM-Kisan Mobile app-யை டைப் செய்யவேண்டும்

  • பிஎம்-கிசான் மொபைல் ஆப் திரையில் திரையில் வந்த பின்பு அதனை டவுன்லோட் செய்யுங்கள்

PM-Kisan Mobile app, Play store-ல் கிடைக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

நேரடியாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

PM கிசான் நிலைமை / பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்

  • உங்கள் பொபைலில் PM கிசான் ஆப்-பை திறந்த பின் Beneficiary என்பதை கிளிக் செய்க.

  • பின்னர் ID type - ஆதார் எண் அல்லது மொபைல் எண் அல்லது கணக்கு எண் என்பதை தேர்ந்தெடுத்து அதனை உள்ளீடுக.

  • இதன் பின் உங்கள் பிரதமர் கிசான் பயனாளி நிலைமை (beneficiary status) திரையில் வரும்.

மேலும் விவரங்களுக்கு, https://www.pmkisan.gov.in/

மேலும் படிக்க...


பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு

தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)