பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 January, 2022 5:30 PM IST
Credit : Hindu Tamil

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் (50% Subsidy) இருசக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் யார் பயன் பெறலாம், எங்கு விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

அம்மா இருசக்கர வாகனம் திட்டம் 

வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டமானது (Amma two wheeler scheme) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே வாகனம் வைத்திருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அந்தத்தொகை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படும். 

LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்?

  • பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்.

  • தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள்

  • சுயதொழில்புரியும் சிறு பெண் வணிகர்கள்

  • அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம் / தினக்கூலி/ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்கள்

  • வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர்களாக பணிபுரியும் பெண்கள்

  • சிறந்த காலமுறை ஊதியம் (Income) பெற்று ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்துக்கு மிகாமல் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் , கூட்டுறவு சங்கங்கள் / கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள் / அரசு சார்ந்த நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் பெண் பணியாளர்கள்.

Credit : Business Today

பயன்பெறும் பயனாளிகளுக்கான தகுதிகள்

  • பெண்களுக்கான வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

  • தொலை தூரங்களில் வசிப்பவர்கள், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்கள், திருநங்கைகள், குடும்பத் தலைவியாக இருப்பவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர், 35 வயதுக்கும் மேல் திருமணம் ஆகாதவர்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது LLR பெற்றிருக்க வேண்டும். மானிய படிவம் சமர்ப்பிக்கும் பொழுது மோட்டார் வாகனத்துறையினால் வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) சமர்ப்பித்தல் வேண்டும்.

இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான நிபந்தனைகள்

  • இரு சக்கர வாகனம் 01.01.2018க்கு பின்னர் தயாரித்ததாக இருக்க வேண்டும்.

  • மோட்டார் வாகனச்சட்டம் 1988ன்படி இருசக்கர வாகனத்திறன் 125CCக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  • இரு சக்கர வாகனம் கியர் இல்லாத மற்றும் ஆட்டோ கியர் உள்ள வாகனமாக இருத்தல் வேண்டும்.

குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!

பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • வயது வரம்புச்சான்று நகல்

  • இருப்பிடச்சான்று நகல்

  • இருசக்கர வாகன ஓட்டுநர் உரிம (Driving License) நகல்.

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

  • பணியில் இருப்பதற்கான சான்றிதழ்

  • ஆதார் அட்டை (Aadhar Card) நகல்.

  • கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகல்கள்

  • முன்னுரிமை பெறுவதற்கான அத்தாட்சி நகல்.

  • சாதிச்சான்றிதழ்

  • இருசக்கர வாகனத்திற்கான கொட்டேஷன்

விண்ணப்பங்கள் எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, பேருராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் (Application Form) மாவட்டங்கள் வாரியாக வரவேற்கப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கூடுதல் தகவல்களை இந்த லிங்கிள் தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க... 

மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

English Summary: Amm two wheeler scheme at 50% subsidy for women Get ahead now
Published on: 05 August 2020, 06:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now