குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Small business ideas
Credit : Business Today

கொரோனா (Corona) பரவலைத் தொடர்ந்து பெரும்பாலன நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் என்பது குறைந்து கொண்டே வருகிறது. பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஆள் குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலானோர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ''கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'' என்ற பட்டுக்கோட்டை சுந்தரனாரின் வரிகள் இன்று பலரின் வாழ்க்கையை மாற்றி வருகிறது.

சின்ன சின்ன தொழில்கள் தொடங்க நினைப்போருக்கான சில ஐடியாக்கள் (Small Business ideas) இங்கு தரப்பட்டுள்ளது. குறைந்த முதலீட்டில் இந்த தொழில்களை நீங்கள் ஆரம்பிக்கலாம். வீடுகளில் இருந்தும் குடிசைத்தொழில் போல் செய்யலாம்...

Small business ideas
Credit : Business Today

மெழுகுவர்த்தி தயாரிப்பு (Candle making Business)

தமிழகத்தில் பெரும்பாலன வீடுகளில் செய்யப்படும் பாரம்பரிய தொழில்களில் மெழுகுவர்த்தி (Candle) தயாரிப்பு. வீட்டில் இருந்தபடியோ ஒரு நாளைக்கு 5 முதல் 25 கிலோ வரை மெழுகுவர்த்தியை தயார் செய்து கடைகளில் விற்பனை செய்யலாம். ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்கள் போன்றவற்றில் அலங்காரப் பொருளாகவும் கலர்கலரான மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உங்களின் கைவண்ணங்கள் மூலம் இந்த தொழிலை லாபகரமாக கொண்டு செல்லாம். இதற்கு குறைந்த முதலீடே (Investment) போதுமானது.

தேவைப்படும் பொருட்கள் - Ingredients required

இந்த தொழிலை துவங்க பயிற்சியும், சில அத்தியாவசிய பொருட்களும் அவசியம். மெழுகு, மெழுகுவார்ப்பு அச்சு, நூல், அரோமா எண்ணெய் போன்றவை மற்றும் மெழுகை உருக்க பயன்படும் கலன், தெர்மாமீட்டர் (Thermo meter), எடை இயந்திரம் (Weight Machine), சுத்தியல் போன்ற சில கருவிகள் இருந்தால் போதுமானது.

Small business ideas
Credit : Dinakaran

ஊறுகாய் தயாரிப்பு (Pickle making Business)

இந்தியாவின் பாரம்பரிய உணவு முறைகளில் தவிற்க முடியாத இடமாக ஊறுகாய் (pickle) இருந்து வருகிறது. நல்ல சமையல் கலை நேர்த்தி தெரிந்து இருந்தால் இந்த தொழிலை துவங்கலாம். மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, தக்காளி, நெல்லி என சீஸனுக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் லாபகரமாக செய்ய உகந்த தொழில் இதுவாகும். சீஸனுக்கு ஏற்ப கிடைக்கும் காய், பழ வகைகளை கொண்டு தயாரிக்கலாம். அக்கம்பக்கத்தினரிடமும், உற்றார் உறவினரிடமும் விற்று எளிதில் வருமானம் (Income) ஈட்டலாம்.

தேவையான பொருட்கள் - Ingredients required

காய் கனிகள் பதப்படுத்தும் பேரல்கள், கட்டிங் இயந்திரம், அரவை இயந்திரம், கலவை இயந்திரம், சீலிங் இயந்திரம், லேபிள் ஒட்டும் இயந்திரம் போன்றவற்றை வாங்குவதன் மூலம் பெரிய அளவில் நீங்களும் சொந்தமாக இந்த தொழிலை துவங்கலாம். இல்லாவிடில், வீட்டுப்பாத்திரங்களும், ஊறுகாய்களை அடைத்து விற்க சிறு சிறு டப்பாக்களுமே போதுமானது.

Small business ideas
Credit : Wikipedia

சாக்லேட் தயாரிப்பு (Chocolate making Business)

நீங்கள் சாக்லேட் (Choclate) பிரியராக இருந்தால் இந்த தொழில் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும். சாக்லேட் பொறுத்தவரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் என்பதால், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் இதற்கு அமோக வரவேற்பு உண்டு. இதற்கு சீஸன் என்பது எல்லாம் கிடையாது. வீட்டில் இருந்தபடியே எல்லா காலத்திலும் செய்யும் தொழிலாக இதை செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள் - Ingredients required

சாக்லேட் வடிவமைப்புக்கான மோல்டுகள் (Mold), பேக்கிங் பேப்பர், தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம், சாக்லேட் கலவை செய்ய ஒரு பாத்திரம், டார்க் சாக்லேட் பார், மில்க் சாக்லேட் பார், முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் மற்றும் ட்ரை ஃப்ரூட் வகைகள் கொண்டு இந்த தொழிலை சுலபமாக துவங்கலாம்.

பயிற்சி அவசியம் (Training Necessary)

எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் அதற்கு பயிற்சி (Training) மிக முக்கியம், சிறுசிறு குடிசைத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு சார்பில் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ஊரிலும் உள்ள YMCA, காந்தி மண்டபம் போன்ற இடங்களில் மாதந்தோறும் சில பல பயிற்சிகள் நடைபெறும். இதுபோன்ற மையங்களை தொடர்புகொண்டால் அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகளுக்கான தகவல்களை பெறலாம். மேலும், மத்திய மாநில அரசு சார்பில் பலவகை மானியங்களும் (Subsidy) வங்கிக் கடன்களும் (Bank Loans) வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க...

வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்!

வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சுய தொழில்கள் - பெண்களுக்கு மட்டும்!

English Summary: Top Most Profitable Small business ideas with Low Investment Published on: 03 August 2020, 07:37 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.