மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 November, 2020 11:39 AM IST
Credit : Oneindia tamil

வட மாநிலங்களைப் பொருத்தவரை, கால்நடை வளர்ப்பிற்கு அடுத்தபடியாக கழுதைகள் வளர்ப்பும் பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில் திரவத் தங்கம் என அழைக்கப்படும் இந்தக் கழுதைப்பாலில் (Donkey Milk) பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதேக் காரணம்.

தமிழகத்தைச் பொருத்தவரை பிறந்த குழந்தைகளுக்கு சிறிதளவுக் கழுதைப்பால் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கழுதைப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதுமட்டுமல்ல எண்ணற்ற நன்மைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது கழுதைப்பால். அந்தப் பட்டியல் இதோ...

தாய்பாலுக்கு நிகரானது (Equivalent to breastfeeding)

கழுதையின் pH அளவானது மனித pH அளவிற்கு சமமாக உள்ளது. எனவே 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்த பாலை தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பாலின் pH அளவு 7-7.5 ஆக இருக்கும், கழுதைப் பாலின் pH அளவு 7-7.2 ஆக இருக்கும். எனவே கைக்குழந்தைகளுக்கு கூட இது பாதுகாப்பானது. தாய்பாலுக்கு நிகரான சத்து கொண்டது.

Credit: Pudhiayathalaimurai

ஜீரணம் (Digestion)

கழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)

கழுதைப் பால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

காஸ்மெடிக் பொருட்கள் (Cosmetics)

எகிப்து ராணி கிளியோபட்ரா என்றாலே கழுதைப்பால்தான் நம் நினைவுக்கு வரும்.
ஏனெனில் அவர் தன்னுடைய அழகை பேணிக்காப்பதற்காக, தினமும் கழுதைப் பாலில் தான் குளித்து வந்தாராம். அவர் குளிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 700 கழுதைகளின் பால் பயன்படுத்தப்பட்டது. இதில் இருந்து கழுதைப்பாலின் உன்னதத்தை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் தற்போது, சோப்பு, பாடி லோசன் (Body Lotion)மற்றும் காஸ்மெடிக் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

உடல் எடை குறைய (Weight Loss)

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். உடல் கழிவுகளும் எளிதாக வெளியேறும்

சரும பராமரிப்பு (Skin Care)

முகத்தில் தோன்றும் பருக்களில் இருந்து விடுதலை பெற, கழுதைப்பால் சிறந்தது. இதேபோல் சருமப் பிரச்னைகளைப் போக்கி சருமத்தை பொலிவானதாக மாற்றும்.

இதயத்திற்கு ஏற்றது (Health for Heart)

இந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது மூளைக்கும் சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

ஆஸ்துமா  (Ashtma)

இந்த பாலில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப் சக்தியை அதிகரிப்பதால் ஆஸ்துமா, சோரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இழைப்பு நோய் இருப்பவர்கள் தாராளமாக இந்த கழுதைப் பாலைக் குடித்து வரலாம்.

புற்றுநோய்க்கு குட்பை (Cancer)

புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கும் இது உதவுகிறது. புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது.

மேலும் படிக்க...

அழகுக்கு அரிசித் தண்ணீர்! நம்ப முடிகிறதா?

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

மஞ்சளில் இலைப்புள்ளி நோய் - பாதுகாக்க என்ன செய்வது?

English Summary: Beauty and the donkey have a thousand things to do - you know!
Published on: 22 November 2020, 11:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now