நாக்கு வறட்சியாக இருத்தல், நாக்கு அரிப்பு போன்றவை கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் (Corona virus)
2019ல் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உருமாறியக் கொரோனா (Transformed corona)
2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய தொற்றானது தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் இங்கிலாந்து நாட்டில் உருமாறியக் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
பிற நாடுகளுக்கும் (To other countries)
இதேபோன்று, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரசானது பரவியது தெரிய வந்தது.
புதிய அறிகுறி (New symptom)
கொரோனா பாதிப்புகளாகக் காய்ச்சல், உடல் வெப்பநிலை அதிகரித்தல், மூச்சு திணறல் உள்ளிட்டவை இதுவரை அறியப்பட்டு வந்தன. இந்த நிலையில், கோவிட் டங் (covid tongue) என்ற புதிய அறிகுறியை கர்நாடக மாநிலம் பெங்களூரு மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
மருத்துவர்கள் தகவல் (Physicians information)
இதுபற்றி கோவிட் பணி குழுவில் ஈடுபட்டு உள்ள மருத்துவர் ஜி.பி. சத்தூர் கூறியதாவது, 55 வயது நிறைந்த நபர் ஒருவர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என சிகிச்சை பெற என்னை அணுகினார்.
வாயில் அதிக வறட்சி (Excessive dryness in the mouth)
அவர், வாயில் அதிக வறட்சி பாதிப்பு உள்ளது என கூறினார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்தேன். சீராகவே இருந்தது. ஆனால், ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிகளவில் இருந்தது.
காய்யச்சல் இல்லை (No fever)
அவருக்குக் காய்ச்சல் இல்லாத நிலையிலும், களைப்பு ஏற்படுவதாகக் கூறினார். இதனால் சந்தேகமடைந்த நான், அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனக் கருதி. ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு வாருங்கள் என அவரிடம் கூறினேன்.
கொரோனா உறுதி (Corona confirmed)
அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இந்த புதிய அறிகுறி பின்னணிக்கான காரணம் பற்றி மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இங்கிலாந்து, பிரேசில் அல்லது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாறிய கொரோனா போன்ற புதிய வகை வைரசுகளால் ஏற்பட்டிருக்கலாம்.
எனவே நாக்கு பாதிப்பு என்பதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர்கள் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு, இந்த வகை கொரோனா வைரஸ்களைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக மரபணு தொடர் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...