நீங்கள் அசைவப் பிரியர்களாக இருந்தாலும், இறைச்சியை ஃப்ரிட்ஜின் வைத்து சாப்பிடலாமா என்பதைத் தெரிந்து கொண்டு சாப்பிடுவதே சாலச் சிறந்தது.
அசைவம் (Non-vegetarian
உணவுப் பிரியர்களின் முக்கிய உணவு என்றால் அது அசைவமான இறைச்சியாகத்தான் இருக்கும். அதிலும், சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, கோலா உருண்டை, சிக்கன் லாலிபாப், ஃபிஷ் ஃபிங்கர் எனப் பட்டியலிட்டால், இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஞாயிறு ஊரடங்கு (Sunday curfew)
இருப்பினும், தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் நம் நாக்குருசிக்கு எமனாக வந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் அடைக்கப்பட்டதால், அசைவப் பிரியர்கள் ஆடிப்போனார்கள்.
சேமித்து வைத்தல் (Storage)
இதன் காரணமாக, முதல் நாளே இறைச்சிக்கடைகள் கூட்டம் வழிய ஆரம்பித்தது. அதனை முன்கூட்டியே அதிகளவில் வாங்கி வைத்து, அடுத்த நாளோ அல்லது அதற்குப் பிறகும் வைத்துச் சாப்பிடுவது வழக்கமாக மாறிவிட்டது.
எத்தனை நாட்கள்? (How many days?)
அந்த வகையில், ஃபிரிட்ஜ் எனப்படும், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்து பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? அது உடலுக்கு ஆரோக்கியமானதா? என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான ஒன்று (Something necessary)
இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும். மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது.
சேகரிப்பு (Collection)
அதற்கு முக்கியக் காரணம் அடிக்கடி வெளியில் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் தேவையான பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்துவிட்டால் சில நாட்களுக்கு அதை பயன்படுத்தலாம்.
தீமைகள் (evils)
குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் இருக்கும் இறைச்சியை சாப்பிடலாமா? நீண்ட நாள் குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருப்பது மூலம் ஏற்படும் தீமைகள் (Meat Side Effects) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
உபாதைகள் (Abuses)
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் சில உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாக்டீரியா (Bacteria)
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் (Deep Freezer) வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும். அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பையில் நோய் உங்களை தாக்கலாம்.
குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
தனித்தனியாக (Separately
சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். அதே நேரத்தில், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.
விஷயமாக மாறும் (Will become the subject)
இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம். இது தவிர, பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.
2 நாட்கள் (2 days)
சமைக்காத இறைச்சியை (Raw meat) ஒருபோதும் ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆனால் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் அது சூடாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது.
மேலும் படிக்க...
ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!
நீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு!