சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 August, 2024 5:50 PM IST
Krishna Jayanti
Prepare Krishna's favorite butter at home

கிருஷ்ண ஜெயந்தி நாளில் எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரும் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எல்லா வீடுகளிலும் வித விதமான இனிப்பு மற்றும் உணவு வகைகளை செய்து அசத்துவர். அவற்றில் அதிக அளவு கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் கலந்த உணவு வகைகள் இருக்கும். பெரும்பாலும், கடையில் வாங்கிய வெண்ணெயினை கொண்டே உணவு பொருட்கள் தயார் செய்வது வழக்கம்.

வெண்ணெய் பாரம்பரியம்

வெண்ணெய்யானது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். வளர்ந்துவிட்ட நவீன காலத்தில், பல பாரம்பரிய உணவு முறைகளைத் நாம் தொலைத்து வருகிறோம்.

இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெண்ணெய் செய்முறை

  • வெண்ணெய் தாயரிக்க முதலில் சில நாட்களுக்கு முன்பிருந்தே காய்ச்சி ஆற வைத்த பாலில் சேரும் ஆடையை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து ஃபீரசரில் சேமித்து வர வேண்டும்

  • முதல் நாளில் சேமிக்கும் ஆடைக்கு பிறகு சிறுது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெண்ணை தயார் செய்யும் அளவிற்கு ஆடை சேர்ந்த பின் அதனை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு ஓரிரு முறை அரைத்து கொள்ளவும். 
  • பிறகு நிறைய குளிர்ந்த தண்ணீர் விட்டு மறுபடியும் அரைக்க வேண்டும். சேர்த்து வைத்த பாலாடை முழுதையும் இதே போல் அரைத்துக்கொள்ளவும். 

  • அப்போது, வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே மிதக்கும். அவற்றை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பந்து போல் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு முறை தண்ணீரில் அலசினால் பந்து போல் வெண்ணெய் உருண்டு வரும் .

வெண்ணெயிலிருந்து நெய் எடுத்தல்

நெய் வேண்டுமென்றால், ஒரு அடி கனமான கடாயில் குறைத்த அளவு தீயில் அந்த வெண்ணெயை வைத்து உருக்க வேண்டும்.. அப்போது, வெண்ணெய் முழுதும் உருகி பொன்னிறத்தில் வரும். அதனை எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதனை கிருஷ்ண ஜெயந்தி நாளில் மற்ற இனிப்பு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்துங்கள்..!

Read more

நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!

பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!Java

Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!

English Summary: Prepare Krishna's favorite butter at home on this Krishna Jayanti
Published on: 25 August 2024, 05:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now