சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 8 April, 2022 3:54 PM IST
Some tips for Children to Caring in the Summer
Some tips for Children to Caring in the Summer

கோடைக்காலம் வந்துவிட்டது; வெயில் வாட்டி வதைக்கிறது.  குழந்தைகள் பலப் பிரச்சனைகளை எதிர்நோக்காமல் பிள்ளைகளைக் காக்கக் கோடைகாலத்தில் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும் ஆரோக்கியக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். 

சரும பராமரிப்பு

மதிய நேரச் சூரியனைத் தவிர்ப்பது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று. குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளால் ஆன ஆடையை அணிந்துவிடுவது சருமத்தைப் பாதுகாக்க எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும். உடலில் அதிகமாக வெளிப்படும் பாகங்களில் சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சருமத்தினைப் பாதுகாக்கும். சன்ஸ்கிரீன்  பயன்படுத்தும் போது அது குறைந்தபட்சம் SPF 30 தரத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தியதன் பின் பயன்படுத்துவது நல்லது.

நீர் சத்து அவசியம்

நீங்கள் சமீபத்தில் குழந்தை பெற்ற பாலூட்டும் தாயாக இருந்தால், வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீர் உட்கொள்ள வேண்டும்.  இக்காலக் கட்டத்தில் தாய்மார்கள் தண்ணீர் சத்தினை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.  அதனால் அதிக தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. நீர்ச்சத்து குறைவினால் குழந்தைகளுக்குச் சோம்பல், எரிச்சல் மற்றும் சிறுநீர் வெளியேறுதல் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது குறித்து மேலும் சந்தேகம் இருந்தால் குழந்தை மருத்துவரிடம் இருந்து ஆலோசனையைப் பெறுவது மிகுந்த பலன் அளிக்கும்.

குழந்தைகளுக்கு நீரிழப்பு வராமல் தடுக்க, அவர்களின் உடலில் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீரிழப்பின் அறிகுறிகளை உற்றுக் கண்காணிக்க வேண்டும். எரிச்சல், உலர்ந்த நாக்கு, குறைவான சிறுநீர் கழித்தல் மற்றும் நிறம் மாறி சிறுநீர் வெளியேறுதல் முதலானவை நீர்ச்சத்துக் குறைபாட்டினைக் காட்டும் அறிகுறிகள் ஆகும். 

ஆரோக்கியமான உணவு

தயிர், மோர், தேங்காய் தண்ணீர், ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம், தர்பூசணி, காய்கறி சாலட்டுகள் மற்றும் வெள்ளரி போன்ற குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய சில உணவுகளை கொடுக்க வேண்டும். கோடைக்காலத்தில் பிள்ளைகளை ஐஸ்கிரீம், குளிர்பான்ங்கள் போன்றவற்றை உட்கொள்வதை எதிர்ப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் இவை கூடுதல் சர்க்கரை மற்றும் கலோரிகளுடன் வருவதால், குழந்தைகள் அதிகம் உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய பழச்சாறுடன் வீட்டில் ஜூஸ்கள் தயாரித்து பருகுவது ஆரோக்கியமான உடல்நலனைக் கொடுக்கும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மிக எளிதாக நீரிழப்புக்கு ஆளாகிறார்கள்.

கோடையில் பொதுவாகத் தண்ணீரால் பரவும் டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், புதிதாக சமைக்கப்பட்ட உணவுகளையும், சூடான உணவுகளையும் உட்கொள்ளலாம்.

 

மேலும் படிக்க..

உடலில் நீர் சத்து குறைபாடு: காரணம், அறிகுறிகள், சிகிச்சை, பாதுகாப்பு

Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048

English Summary: Some tips for Children to Caring in the Summer
Published on: 08 April 2022, 03:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now