1. செய்திகள்

Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048

Daisy Rose Mary
Daisy Rose Mary
sugar free rice

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் RNR- 15048 சுகர் ஃப்ரீ நெல் ரகங்கள், கடந்த 5 வருடங்களாக தென் இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநில ஜெய்சங்கர் ஆராய்ச்சி நிலையத்தால் கண்டுபிடிக்கபட்டது.

இந்த அரிசியில் Low Glycymix Index-ன் அளவு 51 -ஆக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RNR - 15048 சுகர் ஃப்ரீ நெல் - சாகுபடி முறை - RNR 15048 Sugar free rice

  • இதன் ஆயுட்காலம் சொர்ணவாரி பட்டத்தில் 125 நாட்களாகவும், சம்பா பட்டத்தில் 140 நாட்கள் ஆகும். தமிழகத்தை பொருத்தவரை சம்பா பட்டத்தில் மட்டுமே நன்கு மகசூல் தருகிறது.

  • கோடைகால பட்டத்தில் கதிர் சரியாக வெளி வருவதில்லை மற்றும் சில பிரச்சினைகள் வருகின்றன. இந்த ரக நெல்மணிகள் மிக சன்னமானவை .

  • பாரம்பரிய முறையில் நாற்று நட ஏக்கருக்கு 25 கிலோ விதையே போதுமானது. சம்பா பட்டத்தில் இருபது முதல் இருபத்தைந்து நாள் வயது நாற்றுகளை நடுவது அதிக தூர்களுக்கு வழி வகுக்கும்.

  • இந்த ரகத்தை பாரம்பரிய முறைப்படி நடவு செய்வதை காட்டிலும் SRI முறையில் கயறு பிடித்து குத்திற்கு இரண்டு நாற்றுகள் என்ற அளவில் சம்பா பட்டத்தில் நடவு செய்யும்போது (விவசாயியின் அனுபவம் மற்றும் திறமையை பொருத்து) மிக அதிக தூர்களுடன் ஏக்கருக்கு சுமார் 20 முதல் 25 மூட்டை (76 kg) வரை இயற்கை விவசாயத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

  • அவரவர் வயலின் தன்மை பொருத்து களைக்கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் கோனோவீடர் பயன்படுத்தலாம்.

  • நேரடி நெல்விதைப்பு மற்றும் புழுதி கால் விதைப்பிலும் இந்த ரகத்தை பயிரிடலாம் .

  • இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது நல்ல மகசூல் கிடைக்கிறது. மண்ணில் ஓரளவு சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதைத் தாங்கி மகசூல் அளிக்கிறது.

  • சற்று நீளமான கதிர்களை கொண்டுள்ளதால் பயிர் ஓரளவுக்கு சாயும் தன்மை உடையது. எனவே சம்பா பட்டத்தில் பத்து நாட்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம் .

Credit : India mart

இயற்கை முறையில் நல்ல மகசூல் தரும்

ஏக்கருக்கு சுமார் ஐந்து லிட்டர் வரை மீன் அமிலம் மணலில் கலந்து தூவும் போது, நல்ல வளர்ச்சி மற்றும் தூர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் பாசன நீரில் கலந்து விடுவதால் இது உரமாக செயல் புரிந்து நல்ல மகசூல் கிடைக்கும்.

பூச்சி மேலாண்மை - Pest Management 

பூச்சி தாக்குதல் (pest managemet) என்று பார்த்தால் சாதாரண சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் குருத்து பூச்சி தாக்குதல் இருக்கும். புகையான் தாக்குதல் இதற்கு இது வரை இல்லை. கற்பூர கரைசல் இரண்டு முறை முன் கூட்டியே தெளித்து விட்டால் பூச்சி தாக்குதல் வாய்ப்பு மிக குறைவு.

பயன்கள் - Benefits 

இந்த நெல் ரகத்தின் அரிசியில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பிரத்யேகமாக இந்த அரிசி சாதத்தை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடும் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக சொல்கின்றனர் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.


எனவே இந்த ரகத்தை புதிதாக சாகுபடி செய்ய முயற்சி செய்யும் விவசாயிகள் இந்த சம்பா பட்டத்தில் குறைவான அளவில் தத்தம் வயல்களில் சாகுபடி செய்து பார்த்து பின்னர் அதிக அளவில் பயிரிடலாம்.


தகவல்
விவசாயி ஸ்ரீதர் சென்னை.
9092779779.

English Summary: RNR 15048 Sugar free paddy cultivation as a cure for diabetes

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.