கீரை வகைகளில் ஒன்று தான் துத்திக் கீரை. இதை மக்கள் உணவாக சாப்பிடுவது கிடையாது. வெறும் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. துத்தி இலையில் இருக்கும் மூலிகை தன்மை வேறு எந்த கீரைகளிலும் கிடைக்காது. துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.
துத்தி இலையில் கிடைக்கும் பயன்கள்
மூல நோய்க்கு மருந்து துத்தி இலை :
முறையில்லாத உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் போன்ற காரணத்தினால் மக்கள் மூலநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துத்தி இலைகள் மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். இந்த துத்தி இலைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அதனை ஒத்தடம் இடுவதற்கு தயார்செய்து கொள்ளவேண்டும். மூலத்தால் ஏற்பட்ட கட்டி மேல் மிதமாக ஒத்தடம் வைக்க வேண்டும்.இதனால் மூல நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பற்களின் ஈறு பிரச்னைகள் தீர:
துத்தி இலையை வாயில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வாயில் ஏற்படக்கூடிய ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
உடல் வலி, மலச்சிக்கல் தீர:
கொதிக்கும் நீரில் துத்தி இலையை வேகவைத்து மற்றும் துணியில் நனைத்து பிழிந்து ஒத்தடம் வைத்தால் உடல் வலி நீங்கும். பால் மற்றும் சர்க்கரை கலந்து துத்தி இலை கஷாயம் செய்து குடித்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். இந்த துத்தி இலையை பருப்பு சேர்த்து சாப்பிடலாம்.தோலில் அழற்சி ஏற்பட்டால் துத்தி இலையை பயன்படுத்தலாம். மலசிக்கல் ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றையும் குணமாக்கும்.சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.துத்தி விதை இனிப்புச் சுவையுடையது.
மேலும் படிக்க:
கை கொடுக்கும் கரைசல்: பயிர்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கையான வழி
ஆயுர்வேதம் சொல்லும் மூலிகை பொடிகள் மற்றும் அதன் ஈடில்லா பலன்கள் பகுதி - 2